தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கல்லக் காதலனுடன் சேர்ந்து வஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சந்தம் பாறையை சேர்ந்தவர் ரிஜேஷ்,  விஜி என்ற மனைவியும்  ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ரிஜேஷ் அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் பணியாற்றி வந்தார்.  இதனால் குடும்பத்துடன் ரிசார்ட்டுக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில்,  சில நாட்களுக்கு முன்பு ரிஜேஷ் மாயமனார்.  இதனை அடுத்து ரிஜேஷின்  உறவினர்கள் அவரை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

ஆனால் புகார் அளித்த உறவினர்களைத் தடுத்த ரிஜேஷ்  மனைவி லஜி, புகார் எல்லாம் தேவையில்லை,  கணவர் என்னுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார் வெளியூரில் எங்கே இருக்கிறார் என உறவினர்களை சமாதானம் செய்துள்ளார்.  அத்துடன் ரிஜேஷ்  தன்னுடன் பேசியது போன்ற கால் லிஸ்டை காண்பித்து  உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.  ஆனால் ரிஜேஷ்  மாயம் குறித்து சந்தேகம் வலுத்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.  இதையடுத்து  லஜி  குழந்தையுடன் திடீரென காணாமல் போனார்.  இதனால்  போலீசாருக்கு சந்தேகம்  வலுத்தது,  எனவே  ரிசாட்டுக்கு பின்புறத்தில் புதிதாக தோண்டப்பட்ட மண் குவியலாக  இருந்தது,  அதைத்  தோண்டி பார்த்தபோது சாக்குமூட்டையில் ரிஜேஷ்  சடலமாக கிடந்தார்.  அதே நேரத்தில் ரிசார்ட்டுக்கு அருகிலிருந்த  அப்துல் காதர் என்ற இளைஞரும்மாயமாகிஇருந்தார். 

அப்துல் காதருக்கும் லஜிக்கும் இடையேயான கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வீட்டில் தனிமையில் உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர்.   இது கணவர் ரிஜேஷ்க்கு தெரிந்து,  அவர் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார், ஆனால் லிஜி அப்துல் உடன் தொடர்ந்து சல்லாபித்து வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் தங்கள் காதலுக்கு இடையூராக இருந்த  கணவர்  ரிஜேசுக்கு  மதுவில் விஷம் வைத்து அவர்கள் கொலை செய்ததும்  பின்னர் தெரியவந்தது.  இந்நிலையில்  அப்துல்காதர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில் ரிஜேஷ் கொலைக்கு நான் தான் காரணம் இதில் என் குடும்பத்தாருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.  இதனை அடுத்து லிஜி மற்றும் அப்துல் காதர்  செல்போன் எண்களை வைத்து இருவரையும் போலீசார் தேடினர்.  அவர்கள் குமுளியில் இருப்பதாக முதலில் தகவல் கிடைத்தது.  அதனையடுத்து  தமிழக போலீசாரின் உதவியை கேரள போலீஸ் நாடியது,  ஆனால், அதற்குள் அவர்கள் மும்பைக்கு தப்பி சென்றனர்.  மும்பை பனவேலியில்  உள்ள ஒரு விடுதியில் விஜியும் கள்ளக்காதலன் அப்துல்காதர் மற்றும் லிஜியின்  மகள்  ஜெனோவா  ஆகியோர் தங்கியிருப்பது தெரிய வந்தது,  இதனால் மகாராஷ்டிரா போலீசார் லாட்ஜுக்கு விரைந்தனர்.  அங்கு சென்று பார்த்தபோது லிஜி மற்றும் அவரது கள்ளக்காதலன் வசீம் அப்துல்காதர் மற்றும் குழந்தை மூவரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். 

அவர்கள் மூவரையும்  மீட்டு,  மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அதில் மகன் ஜெனோவா உயிரிழந்தார்.  கள்ளக்காதலன் வசீம் அப்துல்காதர், மற்றும் லிஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மூவரும் விஷம் குடித்து பின்னர் தெரியவந்தது.  குறிப்பிடதக்கது.