கள்ளக்காதலனுக்காக கூலிக்கு ஆள்பிடித்து கணவனை கொலை செய்ய போய்.. உயிருக்கு போராடிய கோமா நிலைக்கு போனவர் திடீரென உயிர்பிழைத்த கணவனால் மாட்டிக்கொண்ட மனைவியின் நிலை தற்போது பரிதவிப்பாய் உள்ளது.கூலிப்படையினர் உண்மையை சொல்ல காயத்ரியும் சேர்த்து கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.கள்ளக்காதலன் யாஷினை தேடி மதுரை விரைந்திருக்கிறது தனிப்படை டீம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் வீடு புகுந்து தாக்கியதில்மண்டை உடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கட்டிலில் இருந்து விழுந்ததால் அடிபட்டதாக அவரது மனைவி கூறுவதன் பின்னணியில் சந்தேகம் உள்ளதாக படுகாயமடைந்த வாலிபரின் தம்பி தெரிவித்துள்ளார்.
  

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பால்புரத்தை சேர்ந்தவர் கணேஷ் (39) இவர் அமெச்சூர் வீடியோ கிராபர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31) இவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கணேஷ் வீட்டில் உள்ள கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் இந்த அளவுக்கு காயம் ஏற்படாது. மேலும் அவர் கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு மண்டை ஓடு சேதமாகி உள்ளதாகவும் அவரது விலா மற்றும் மர்ம உறுப்பு போன்றவற்றில் பலமான அடி விழுந்துள்ளது, இதனை மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியதால் இந்த காயம் ஏற்பட்டதாகவும் அதேநேரம் கணேஷின் மனைவியும் தனது அண்ணியுமான காயத்ரி கூறுவது போன்று அவர் கட்டிலில் இருந்து கீழே விழ வாய்ப்பில்லை இதன் பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளதாகவும் சந்தேகிப்பதாக கணேஷின் சகோதரர் ரமேஷ் கூறியுள்ளார். 

இதுகுறித்து கோமா நிலைக்கு சென்று திரும்பிய கணேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். எனவே இந்த விஷயத்தில் போலீசார் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தன் கணவனை கொலை செய்ய கூலிப்படைக்கு 2லட்சம் வரை பணம் பேசி கொலை செய்ய திட்டம் தீட்டியது அம்பலமாகியது. மதுரையைச் சேர்ந்த கள்ளக்காதலன் யாசினுக்காக கணவர் கணேஷ்சை கொலை செய்ய திட்டம் போட்டிருக்கிறார் காயத்ரி. கூலிப்படையைச் சேர்ந்த கருணாகரன் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில். அவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காயத்ரியும் யாஷினும் எங்களை அணுகி 2லட்சம் ரூபாய் தருவதாக பேசி பணம் கொடுத்தார்கள்.கொரோனா காலம் நாங்களும் வறுமையில் இருந்ததால் அந்த கொலைக்கு ஒப்புக்கொண்டோம்.அதற்கான திட்டத்தையும் காயத்ரி கொடுத்தார்.அதன்படி நாங்கள் நடந்துகொண்டோம்." இரவு கணேஷ் தூங்கியதும் நான் உங்களுக்கு போன் செய்கிறேன் அதன் பிறகு வந்து கொலைசெய்துவிடுங்கள் என்றார். அதன்படி காயத்ரியும் போன் செய்தார்.. உள்ளே நுழைந்தோம் தாக்கினோம்.கணேஷ் போட்ட சத்தம் வெளியில் கேட்டதால் ஆட்கள் வந்துவிட்டார்கள். அதோடு நாங்கள் ஓடிவிட்டோம். மீண்டும் போன் போட்டு கணேஷ் சாகவில்லை மீண்டு வாருங்கள் என்றார் காயத்ரி நாங்கள் வந்தால் மாட்டிக்கொள்வோம்.அதனால் வரமுடியாது என்று சொல்லிவிட்டோம். என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் கூலிப்படையினர்.


யார் இந்த யாஷின்..? மதுரையைச்சேர்ந்தவர். 5ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிகுளம் முக்கு பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்திருக்கிறார்.அருகிலேயே ஜெராக்ஸ் கடை நடத்தியவர் தான் காயத்ரி. இவர்கள் இருவருக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்யும் அளவிற்கு போனது ஏன்? அதற்கும் ஒரு காரணம் உண்டு. யாஷின் தன்னுடைய ஆசை நாயகிக்கு மழலைப்பள்ளி ஆரம்பித்து அந்த பள்ளிக்கு காயத்ரியை முதல்வராக்கியிருக்கிறார். இனி சொல்லவா..! வேண்டும். இவர்களின் உறவுகள் பிரிக்கமுடியாத அளவிற்கு சென்று விட்டது.தங்களின் பல்வேறு உறவுகளுக்கு தடையாக இருப்பது கணவர் கணேஷ். அவனை கொலைசெய்து விட முடிவு செய்திருக்கிறார்கள்.
"திருடத் தெரியாதவன் தலையாரி வீட்டில் திருடினானாம்."இந்த பழமொழி இவர்களுக்கு பொறுந்தியிருக்கிறது. கூலிப்படையை ஏவி கொலை செய்ய சொல்லிவிட்டு என் கணவன் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று ஆடிய நாடகம் அம்பலமாகியுள்ளது.கோமா நிலையில் இருந்த கணேஷ் நினைவு திரும்பிய நிலையில் இந்த உண்மைகள் வெளியாக தொடங்கியிருக்கிறது. யாஷினை கைது செய்ய போலீஸ் மதுரைக்கு விரைந்திருக்கிறது. யாஷின் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.