கணவன் கண்ணெதிரிலேயே கள்ளக்காதலனுடன்  மனைவி உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கள்ளக்காதலனை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கணவன் கண்ணெதிரிலேயே கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், கள்ளக்காதலனை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோட்டாத்துறை சேர்ந்தவர் ரவி, இவருக்கும் அனுராதா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் பிரகாஷ் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் என்ற நபருடன் கடந்த 5 ஆண்டுகளாக அனுராதாவுக்கு திருமணத்துக்கு புறம்பான உறவு இருந்து வந்தது. இது அறிந்த கணவன் ரவி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் மனைவி கணவனின் பேச்சை பொருட்படுத்தவில்லை, ஒருகட்டத்தில் கணவனையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ளக்காதலுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

கணவன் கண்ணெதிரிலேயே அடிக்கடி பைக்கில் வலம் வந்து காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். கணவன் கண்ணெதிரிலேயே இது நடந்தாலும் குழந்தைகளுக்காக இவற்றையெல்லாம் கணவட் ரவி சகித்துக் கொண்டார், ஆனால் தயவுசெய்து குழந்தைகளுக்காக வீட்டுக்கு வருமாறு மனைவியிடம் பார்க்கும் போதெல்லாம் கெஞ்சினார். குழந்தைகளும் அம்மா வீட்டுக்கு வாங்க என கெஞ்சினர், அப்போதும் அனுராதா மனம் இரங்கவில்லை, தன்னால் வீட்டுக்கு வர முடியாது கள்ளக்காதலனுடன் தான் இருப்பேன் என அனுராதா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் விரக்தி அடைந்த கணவர் ரவி எனது குழந்தைகளை தாயிடமிருந்து பிரீத்தா உன்னை சும்மா விடமாட்டேன் நிச்சயம் கொல்லாமல் விடமாட்டேன் என கள்ளக் காதலன் இமானுவேலை எச்சரித்தார். நிச்சயம் ஒரு நாள் என் மனைவி அழைத்துச் செல்வேன் என சபதம் ஏற்றார்.

இந்நிலையில் இம்மானுவேலை தீர்த்துக்கட்ட ரவி வாய்ப்பு தேடினார், இம்மானுவேலை கொல்ல திட்டமிட்ட ரவி சம்பவத்தன்று பிரகாஷ் நகர் புறநகரில் உள்ள செங்கல் சூளையில் இம்மானுவேல் தூங்கிக் கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அங்கு கத்தியுடன் சென்றார்.. அழ்ந்ந உறக்கத்தில் இருந்த கள்ளக் காதலன் இம்மானுவேலை ரவி கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். இந்த கொலை குறித்து ஏற்கனவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோடம் பள்ளி பைபாஸ் ரோட்டில் வைத்து ரவியை கைது செய்தனர். ரவி கொலைக்காக பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இமானுவேலின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர், ரவி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், இந்த வழக்கில் மேலும் மனைவி அனுராதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலால் திருமணமாட அழகான ஒரு குடும்பம் சிதைந்த சம்பவம் அப்பகுதியில் வறுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.