குருபரபள்ளி அருகே கடைக்கு செல்வதாக ஏமாற்றிவிட்டு பக்கத்து வீட்டுக்காரருடன் மனைவி ஓடிப்போனதால், நொந்துப்போனகணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி அருகே உள்ள பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பன் மகன் செல்வம் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்   அஸ்வினி என்ற பெண்ணக்கும் கல்யாணமாகி சில மாதங்களே ஆகிறது. அஸ்வினி கடந்த 15-ம் தேதி வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்கி வருவதாக கூறிவிட்டு  சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் அஸ்வினி அதேப் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளதாகவும் அவருடன் சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து சுரேஷ் மற்றும் அஸ்வினியை வலைவீசித் தேடி வருகின்றனர்.