கள்ளக்காதலியுடன் கணவர் உல்லாசம்.. விஷயம் தெரிந்த மனைவி.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கோவை மாவட்டம் ரத்தினபுரி அருகே உள்ள கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன.
வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த கணவரை மனைவி கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ரத்தினபுரி அருகே உள்ள கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தினேஷ்குமாருக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக நாளடைவில் தினேஷ்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் தினேஷ்குமார் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு மனைவி சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தினேஷ்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.