போலி ஸ்மார்ட் கார்டு தயாரித்து, விற்பனை செய்து வந்த கணவன் பற்றிய கேடி வேலைகளை அவரது மனைவியே, வெளியில் சொல்லியுள்ளார்.

திண்டுக்கல் அருகே புதுநகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவர், உள்ளூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், குமரேசன்வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே ரேஷன் பொருட்களை திருடி விற்பது, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு இருப்பது போன்ற பல வேலைகளை செய்துவாந்துள்ளதாக அவரது மனைவி ரெங்கநாயகி, புகார் எழுப்பியுள்ளார்.

அதிலும் கடந்த சில வருடங்களாக போலி ஸ்மார்ட் கார்டுகளை தயாரித்து, அதன்மூலமாக, மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை முறைகேடு செய்து, கள்ளச்சந்தையில் விற்று காசு சம்பாதித்து வருகிறாராம். இது போதாதென்று அரசு வழங்கிய பொங்கல் பரிசை, குமரேசன் பல்க் அமௌண்ட்டை ஆட்டையைப் போட்டுள்ளார்.

இவர் இதுவரை, ஆட்டையை போட்ட  தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்றும், அவரது மனைவி ரங்கநாயகி கூறியுள்ளார். இதனால் போலீசார் தனது கணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். கணவனின் திருட்டுத் தனத்தை வெளியுலகுக்கு காட்டிக் கொடுத்த மனைவியின் நேர்மையை  பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்.