தோஷம் கழிக்கத்தான் உன்ன கல்யாணம் பண்ணேன்.. 14 நாட்கள் புகுந்து விளையாடிய போலீஸ் SI.. புது மனைவிக்கு ஷாக்.
திருமணம் செய்து 14 நாட்கள் பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு, தோஷம் கழிப்பதற்காக தான் திருமணம் செய்தேன் எனக் கூறி பிரிந்து செல்லுமாறு புது பெண்ணை மிரட்டி வரும் காவல் உதவி ஆய்வாளர் மீது அப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருமணம் செய்து 14 நாட்கள் பெண்ணுடன் குடும்பம் நடத்தி விட்டு, தோஷம் கழிப்பதற்காக தான் திருமணம் செய்தேன் எனக் கூறி பிரிந்து செல்லுமாறு புது பெண்ணை மிரட்டி வரும் காவல் உதவி ஆய்வாளர் மீது அப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உறிமங்களும் பகுதியை சேர்ந்தவர் இளவரசி, இவர் பிஏ பட்டதாரி ஆவார், இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில் முதுமொத்தன்மொழி கிராமத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆறுமுகநயினார் என்பவருடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடத்தி வைத்தனர். அப்போது அவருக்கு இளவரசி குடும்பத்தினர் 20 சவரன் தங்க நகை ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்துடன் வரதட்சனை கொடுத்தனர். ஆறுமுகநயினாருக்கு 5 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர். இந்நிலையில் இளவரசியுடன் காவல் உதவி ஆய்வாளர் முதல் இரவில் ஈடுபட்டார் அப்போது இளவரசியின் விருப்பத்துக்கு மாறாக அவருக்கு ஊக்க மாத்திரைகளை கொடுத்து அவர் உடலுறவு மேற்கொண்டதாக தெரிகிறது.
மேலும் முதலிரவில் மனைவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டதை உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் வீடியோ எடுத்துள்ளார், அதைத்தொடர்ந்து இளவரசியுடன் 14 நாட்கள் அவர் குடும்பம் நடத்தினார். இதனை அடுத்து வேலை நிமித்தமாக கோவை வந்தார் ஆறுமுகநயினார், பின்னர் ஒரு நாள் அவரது செல்போனில் இருந்து ஆறுமுகநயினாரின் பெண் தோழி எனக்கூறிய லதா என்ற பெண் இளவரசியை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அதே எண்ணில் இருந்து பேசிய ஆறுமுகநயினார் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் அவசரத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டியதாயிற்று, நீ அதிகம் ஆசைப்படாதே, உன்னால் முடிந்தால் வீட்டிலேயே ஒரு முளையில் இரு, இல்லை என்றால் உன் வீட்டிற்குப் போய் விடு, அப்படியும் அடம்பிடித்தால் உனது ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இலவரசி ஆறுமுகநயினாரின் பெற்றோரிடம் இது குறித்து கூறினார்.
ஆனால் அதற்கு கொஞ்சமும் அலட்டிக் கொள்ளதா அவர்கள், என் மகன் டிஎஸ்பி வரை பதவி உயர வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய தகுதி என்ன எங்களுடைய தகுதி என்ன என்று கேட்டு இலவரசியை அவமானப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் தன் மகனுக்கு ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்கான தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டோம் எனவும் அவர்கள் கூறினர். இதை கேட்டு இளவரசி அதிர்ச்சியடைந்தார் அதே நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னை வேறு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருவதாக கூறியும், அவருக்கு இந்த விவகாரத்தில் உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாதிக்கப்பட்ட புது மனைவி இளவரசி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்தார். குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஆறுமுகநயினார் தற்போது கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.