பொண்டாட்டிய ஏமாற்றி விட்டு கள்ளக்காதலியுடன் அஜால் குஜால்..! சினிமா தியேட்டர் வாசலில் முடிய பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிய மனைவி..! 

வேறு ஒரு பெண்ணுடன் தன் கணவர் சினிமாவிற்கு சென்றதால், கணவருடன் சென்ற பெண்ணை தாறுமாறாக துவைத்து எடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று உள்ளது.

இந்தூர் அருகே உள்ளது கஜ்ரான்னா (khajranna) இங்கு உள்ள ஓர் திரையரங்கு முன்பு இரண்டு பெண்கள் பயங்கரமாக சண்டையிட்டு உள்ளனர். ஏன்? எதற்காக.. திடீரென இப்படி பொதுவெளியில் திரையரங்கு முன் சண்டையிடுகிறார்கள்? என பொதுமக்கள் விசாரிக்கவே கள்ளக்காதல் விவகாரம் வெளிவந்துள்ளது. இதனை கேட்டு பொதுமக்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் சற்று நேரம் பரபரப்பாக சண்டைக் காட்சியை பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.

அதாவது தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சினிமாவிற்கு செல்கிறாரோ என்ற சந்தேகத்தின் பெயரில் பின்தொடர்ந்து வந்துள்ளார் மனைவி. சந்தேகப்படும்படியே கணவர் வேறு ஒரு பெண்ணுடன் திரைப்படத்திற்கு வந்துள்ளார். இதனை கையும் களவுமாக பிடித்து பெண்ணையும் கணவரையும் அடித்து துவைத்து எடுத்துள்ளார் மனைவி.

குறிப்பாக அந்த பெண்ணை, மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு அரை மணி நேரம் அடித்துள்ளார் மனைவி. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.