தெலங்கானா மாநிலம் ஐதராபாத், கொட்டகொம்முகூடம் பகுதியை சேர்ந்த தம்பதி லஷ்மண், சுஜன்யா ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடை பெற்றது.

திருமனத்திற்கு பின் சில காலம் மனையியுடன் வசித்த லஷ்மண், பின்னர் அண்மையில் கூக்கட்பள்ளியில் வசிக்கும் அனுஷா என்ற பெண் வீட்டிற்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டார்.

கணவன் கள்ளக் காதலி வீட்டிலேயே தங்கியதால்  மனவேதனை அடைந்த சுஜனா எவ்வளவோ கெஞ்சி கேட்டும் லஷ்மண் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து விவாகரத்து கேட்டு சுஜனா நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும்  லஷ்மண் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் மவுனமாக இருந்து வந்தார்.

இதனால் கோபம் அடைந்த சுஜனா உறவினர்களுடன் அனுஷா வீட்டிற்கு சென்று கணவன் லஷ்மணையும் அவருடைய கள்ளகாதலி அனுஷாவையும் அடித்து, உதைத்து தாக்கினார். சுஜனாவின் உறவினர்களும் லஷ்மண் மற்றும் அவரமு கள்ளக்காதல் ஆகிய இருவருக்கும் செம தர்மஅடி கொடுத்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும்  கூக்கட்பள்ளி காவல் நிலையத்தில் சுஜனா ஒப்படைத்தார். கூக்கட்பள்ளி போலீசார் நடந்த சம்பவங்கள் பற்றி லஷ்மணிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

லஷ்மண் கள்ளகாதலி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர்.