திருமணமான 20 நாட்களில் கணவனை கழட்டிவிட்டு தனது பள்ளிப்பருவ காதலனுடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர்  வேல்முருகன் ( 29 ) வயதாகும் இவர் பெற்றோரை இழந்த நிலையில் தன் பாட்டியிடம் வளர்ந்தார் ,  இந்நிலையில் அரசு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் வேல்முருகன்.   இவருக்கும் பரச் சேரியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி பெண் ராஜஸ்ரீ என்பவருக்கும் நவம்பர் 24ஆம் தேதி திருமணம் நடந்தது ,  திருமணம் நடந்து மகிழ்ச்சியாக சென்ற நேரத்தில்  டிசம்பர்  16ஆம் தேதி வேல்முருகன் வேலைக்கு சென்று  மாலை வீடு திரும்பினார் .  அப்போது வீட்டில் மனைவி  ராஜஸ்ரீயை காணவில்லை .  மனைவியை வேல்முருகன்  அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை காணவில்லை.

 

வீட்டில் தேடிப் பார்த்தபோது மனைவி தனது கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை கழட்டி வைத்துவிட்டு ,  பிரோவில்  இருந்த 70 சவரன் நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்துடன்  அவர் மாயமானது தெரியவந்தது .  இதனை அடுத்து மனைவியை  அன்று  இரவு முழுவதும் தேடியும்  அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை.   இதனால் ,  மனைவி காணவில்லை என வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் கொடுத்தார் .  இதையடுத்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில்  ராஜஸ்ரீ குறித்து  அதிர்ச்சி  தகவல்  வெளியானது.  அதாவது ராஜேஸ்ரீ யின்  பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞர் சந்தோஷ் அவரது பள்ளி வகுப்பு தோழன் என்பதும்,  அவருடன் ராஜஸ்ரீக்கு  காதல் இருந்து வந்ததும்  தெரியவந்தது . 

சந்தோஷ் வேலை தேடி வந்த நிலையில் வீட்டில் அவரும் மாயமாகி இருந்தார் .  இதனால் போலீசாருக்கு  சந்தேகம் வலுத்தது உடனே சந்தோஷின்  நண்பர்களை பிடித்து  போலீசார் விசாரித்தனர் . அதில்  சந்தோஷ் ஒரு பெண்ணுடன் பெங்களூர் வந்ததாக அவர் நண்பர் ஒருவர் தெரிவித்தார் .  இதற்கிடையே திருமணமான பெண்ணுடன் தனது  மகன் வீட்டை விட்டு சென்றதால் அவமானம் தாங்கமுடியாமல் சந்தோஷன்  தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் .  ஏற்கனவே சந்தோஷத்துக்கு அதிக கடன் இருந்ததால் தன் மகளை காதலிப்பது போல் நடித்து நகையுடன் மாயமாகி விட்டார் என ராஜஸ்ரீ யின்  தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் திருமணமான 20 நாட்களில் கணவனுக்கு மோசம் செய்துவிட்டு காதலுடன் வெளியேறியதுடன்,   காதலினின்  தந்தையின்  மரணத்திற்கும் ஒரு பெண்  காரணமாகியுள்ள   சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .