பெண் ஒருவர் தன் தோழி மீது கொண்ட காதல் காரணமாக ஆணாக  மாறி உள்ளார்  .

ராமநாதபுரம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர்கள்  ராஜேஷ் - சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 2012  ஆண்டு திருமணம் நடந்து 6  வயதில் பெண் குழந்தை உள்ளது . இந்த  நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷிற்கு விபத்து ஏற்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே உள்ளார்.

சமீபத்தில் சுகன்யா மதுரையில் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்ற போது தனது பள்ளி தோழியான எப்சியாவை சந்தித்து உள்ளார். இருவரும் பள்ளி காலத்தில் மிகவும் நெருக்கமாக பழகி உள்ளனர் . எப்சியாவிற்கு ஏற்பட்ட பாலின மாறுபாட்டால் அவர் ஆணாக மாறியதை அறிந்த சுகன்யாவின் பெற்றோர் அவரை  எப்சியாவிடம் பழகுவதை கண்டித்து உள்ளனர் .

 இந்த நிலையில் எப்சியாவை  சந்தித்த சுகன்யா மனம் விட்டு பேசியுள்ளார் . தன் கணவரின் நிலை குறித்து கூறி வருந்திய சுகன்யாவை தேற்றிய எப்சியா  தன்னுடன் வந்துவிடுமாறும் , இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழலாம் என கூறி அழைத்துள்ளார்.  அதை ஏற்று கொண்ட சுகன்யா உடனே அவரை அழைத்து செல்ல கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து வாழ ஏதுவாக எப்சியா  தன் பெயரை  ஜெய்சன் ஜோஷுவா என மாற்றிக்கொண்டார்.


இதை  அறிந்த  சுகன்யாவின் பெற்றோர் அவரை திரும்பி வந்து கணவரோடு சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறியுள்ளனர்.  ஆனால் அதை ஏற்காமல் சுகன்யா எப்சியாவை  விட்டு வர மறுத்துள்ளார் .

6  வயதே நிரம்பிய சுகன்யாவின் பெண் குழந்தை தாயை காணாமல் தவித்த நிலையில் தற்போது ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு சுகன்யா  புகார் அளித்துள்ளார். ஆனால் முறையற்று வாழுபவரிடம் குழந்தையை கொடுக்க முடியாது என சுகன்யாவின் பெற்றோர் மறுத்து விட்டனர் .இதனால் நீதிமன்றம் மூலம் தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்ற கணவரையும் 6 வயது பெண் குழந்தையையும் விட்டுவிட்டு தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்ணால் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர்