திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஜங்கால்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் .  கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். 

இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர்  ராமுத்தாய் . இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் இறந்து விட்டதால் தனது குழந்தைகளுக்காக ராமுத்தாயும் சிவக்குமாருடன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. திருமணம் செய்து கொள்வதாக ராமுத்தாயிடம் உறுதியளித்து சிவக்குமார் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் ராமுத்தாய் 7 மாத கர்ப்பிணியானார்.

இந்த விபரம் ஊருக்குள் தெரிந்ததால் ராமுத்தாய் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிவக்குமாரிடம் கேட்டார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததுடன் இனிமேல் திருமணம் செய்ய வற்புறுத்தினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்குபதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.