தெற்கு கரோலினா மாநிலம் சார்லஸ்டன் என்ற நகரில் உள்ள புர்க்கே பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிவர் ஜெனிபர். 28 வயதேயான இளம் ஆசிரியை ஆன இவருக்கு திருமணமாகி பத்து மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவருக்கு எதிராக சார்லஸ்டன் சர்க்யூட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்தவர் ஜெனிபர் பணிபுரியும் அதே பள்ளியில் படிக்கும் பதினேழு வயது மாணவனின் பெற்றவராவார். 

இந்த வழக்கில் ஜெனிபர் மீதான குற்றச்சாட்டு அனைவரையும் அதிர வைக்கும் வகையில் உள்ளது. அது என்னவெனில் மாணவனை கணக்கு ஆசிரியை ஜெனிபர் பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுவதே ஆகும். பலமுறை ஆசிரியை ஜெனிபர் தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் மறுத்தபோது மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து ஆசிரியையின் வற்புறுத்தலுக்கு படியாததால் தமது மதிப்பெண்ணை 98க்கு பதிலாக 89 என குறைத்து விட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வீடு கார் வகுப்பறை என ஒரு இடம் கூட விடாமல் ஆசிரியர் ஜெனிபர் தம்மிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் பாலியல் உறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் மாணவன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே தெரியும் என்றும் அவர்கள் இதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல தவறிவிட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகார்களை ஆசிரியைக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்கறிஞர் மறுத்துள்ளார். 

இந்த ஆசிரியை மீது இதற்கு முன் இப்படி ஒரு புகார் எதுவும் எழுந்தது இல்லை என்றும் ஜெனிபர் விருது பெற்ற ஆசிரியை என்றும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.