சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த பெயின்டிங் மேஸ்திரி கார்த்திகேயன்க்கும் பெருந்துறையைச் சேர்ந்த சமூக சேவகி புஷ்பாவின் மகள் புவனேஸ்வரிக்கும் நட்பு ஏற்பட்டுள்ள பிறகு இந்த நடப்பு கள்ளக்காதலாக மாறி கணவனை பிரிந்து வீட்டைவிட்டு ஓடி வந்து கணவன் மனைவி போல உல்லாசமாக வாழும் அளவிற்கு சென்றுள்ளது. 

இந்தநிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால் சிறுவன் கிஷோரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து புவனேஸ்வரியிடமும் கார்த்திகேயனிடமும் நடத்திய விசாரணையில் எதற்காக பெற்ற மகனையே கொலை செய்தேன் என புவனேஸ்வரி சொன்னது அதிர்ச்சி அளித்துள்ளார். 

எனக்கு 16 வயது இருக்கும்போது என்னுடைய உறவினரான சோமசுந்தரத்துடன் கல்யாணம் நடந்தது மூன்றரை ஆண்டுகளுக்கு முன் கிஷோர் பிறந்தான். கடந்த சில இரண்டு வருடங்களாக குடிப்பழக்கத்துக்கு அடிமையான எனது கணவர், என்னை தினமும் அடித்து துன்புறுத்தினார். இதனால் என் நிம்மதியில்லாமல் வாழ்ந்து வந்தேன். 

இந்நிலையில் கடந்த ஆண்டு அம்மா, சித்திமகள், நான் மற்றும் எனது மகன் சென்னை போரூரில் நடந்த பெண்கள் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்தோம், அப்போது அவசர அவசரமாக எனது அம்மா ஒருக்குப் போனதால் என்னையும் சித்திமகள், கிஷோரைக் கவனித்துக்கொள்ளும்படி மாநாட்டுக்கு வந்த திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவரும் எங்களுடன் நட்பாக பழகினார். அவரின் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. இதனால் இருவரும் போன் நம்பரை பரிமாறிக்கொண்டோம், கார்த்திகேயன், என்னிடம் பேசத் தொடங்கினார். முதலில் நடந்த கல்யாணத்தால் அனுபவித்த சில கசப்பான சம்பவங்களால் வாழ முடியாமல் இருந்த எனக்கு கார்த்திகேயனின் அன்பு, பேச்சு என்னக்கு ஆறுதலாக அமைந்தது.

இதனால் பொங்கல் பண்டிகைக்குப்பிறகு கிஷோரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்த நான், சென்னையில் பெயிண்ட் வேலை பார்த்து வந்த கார்திகேயனோடு வாழ விரும்பியதால் அம்பத்தூர் மேனாம்பேடு, வ.உ.சி.நகரில் முதல் மாடியில் வாடகை எடுத்து தங்கினோம். கடந்த 6 மாசமாக உல்லாசமாக வாழ்ந்து வந்தோம், கார்த்திகேயன் எப்போது வீட்டிற்கு வந்தாலே கிஷோர் அழத் தொடங்கிவிடுவான். முதல் திருமண வாழ்க்கை சந்தோஷமாக, இந்த வாழ்க்கையிலும் கிஷோரால் பறிபோனது, கிஷோர் மீது எனக்கு வெறுப்பு வந்தது.

இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நான், கிஷோரை கரண்டியால் அடித்தேன். வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்த அவன் மாடியிலிருந்து கீழே விழுந்தான். அதில் அவனின் வலது தொடை எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக கிஷோரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், அப்போது பரிசோதித்த டாக்டர்கள், கிஷோரின் உடல் நலம் மோசமாக இருப்பதாகக் கூறினர். 

இதையடுத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நானும், கார்த்திகேயனும் கிஷோரை தூக்கிக்கொண்டுச் சென்றோம். மருத்துவமனை ஊழியர் ஒருவர், இது போலீஸ் கேஸ், முதலில் போலீஸுக்குத் தகவல் தெரியப்படுத்த சொன்னார். போலீஸுக்குத் தகவல் தெரிந்தால் சிக்கல் ஆகிவிடும் என்பதால், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துவிட்டோம். அப்போது கிஷோரின் உடலில் எந்த அசைவும் இல்லை. அவன் இறந்துவிட்டான், 

அந்தச் சமயத்தில் பயத்தில் எனக்கு அழ கூட முடியாமல் அமைதியாக இருந்தேன். அப்போதுதான் கிஷோரின் சடலத்தை திருவாரூக்குச் கொண்டு சென்றால் அங்கு வைத்து யாருக்கும் தெரியாமல் எரித்துவிடலாம் என்று கார்த்திகேயன் ஐடியா கொடுத்தார். உடனடியாக ஆம்புலன்ஸில் கிஷோரின் உடலை திருவாரூருக்குச் சென்றோம். அப்போது தான் கிஷோர் இறந்த தகவலை அம்மாவுக்கு போனில் சொன்னேன். ஆனால் அவரோ அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லிவிட்டதால். உடனடியாக போலீஸார் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கும் திருவாரூர் காவல் நிலையத்துக்கும் அம்மா போனில் புகார் அளித்ததால், அவர்களும் எங்களைத் தேடியுள்ளனர். திருவாரூரில் உள்ள கார்த்திகேயனின் சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் கிஷோரின் சடலத்தை எரிக்க கொண்டுசென்ற போது  போலீஸார் எங்களை மடக்கிப்பிடித்துவிட்டனர். பிறகு  கிஷோரின் சடலத்தோடு திருவாரூரிருந்து எங்களை அம்பத்தூருக்கு அனுப்பி வைத்தனர்.