காதலித்து திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் மனைவி முதல் கணவனை தேடி சென்றதால் விரக்தி அடைந்த காதல் கணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
காதலித்து திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் மனைவி முதல் கணவனை தேடி சென்றதால் விரக்தி அடைந்த காதல் கணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது
தொழிற்சாலை மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் சீதாராமன் இரண்டு மாதங்களுக்கு முன்பு சோனா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார், இருவரும் திருமணமாகி இரண்டு மாதங்கள் வரை மகிழ்ச்சியாகவே இருந்தனர், இந்நிலையில் ஒருநாள் திடீரென வேலைக்கு சென்ற அவரது மனைவி சோனா பணம் மற்றும் நகைகளுடன் மாயமானார். வீட்டுக்கு வந்த கணவன் மனைவியை தேட ஆரம்பித்தார், ஆனால் அந்த பெண் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை பூந்திடயில் உள்ள தனது முன்னாள் கணவனுடன் சென்றதாக தகவல் கிடைத்தது, மனைவியின் துரோகத்தால் அதிர்ச்சியடைந்த இரண்டாவது கணவன் இரண்டு மாதங்களாக தன்னுடன் நெருங்கிப் பழகிய மனைவி ஏன் இப்படி செய்தாள் என புலம்பித் தவித்தார், மனைவி மீண்டும் வரமாட்டார் என உறுதி செய்த அந்த இளைஞர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவரது பிரேதத்தில் இருந்து போலீசார் தற்கொலை கடிதம் கைப்பற்றினர்.

முழு விவரம்:-
சீதாராம் பூந்தி மாவட்டத்திலுள்ள ஷியாம் விகார் பிரதாப் நகரில் வசித்து வந்தார். சீத்தாபுரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார், இந்நிலையில் டயாலி பூந்தி பகுதியைச் சேர்ந்த 28 வயதான சோனா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் வெகு விமர்சியாக நடந்தது. இரண்டு மாதங்கள் வரை அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மே 27ம் தேதி இவரது மனைவி சோனா திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அலுவலகத்துக்கு செல்வதாக கூறிச் சென்ற அந்தப் பெண் நகை பணத்துடன் மாயமானார். வேலை முடித்து வீட்டிற்கு வந்த சீதாராம் தனது மனைவியை தேடினார், ஆனால் எங்கு தேடியும் அவரது மனைவியை காணவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாராம் கதறி துடித்தார். அப்போது அவள் தனது முதல் கணவருடன் சென்றதாக தகவல் கிடைத்தது.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சீதாராம் மீண்டும் அவள் திரும்பி வரமாட்டாள் என உணர்ந்துகொண்டார், இரண்டு மாதமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி ஏன் இப்படி தன்னை ஏமாற்றினார் என கேட்டு புலம்பினார். உறவினர்கள் முன்னிலையில் தனது முகத்தை இனி காட்ட முடியாது என முடிவு செய்த அவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இறந்த அவரின் பாக்கெட்டில் இருந்து போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர், மொபைல் எண் அடிப்படையில் உறவினர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர், சீதாராம் தனது தற்கொலை கடிதத்தில் பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தான் காதலித்த மனைவியால் ஏமாற்றப்பட்டேன் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது குடும்பத்தினரை தான் சங்கடப்படுத்த விரும்பவில்லை

எனது வங்கி கணக்கில் 1.30 லட்சமும் பணியாற்றும் நிறுவனத்தில் ஒரு லட்சம் பிஎப் பணமும் இருக்கிறது, அதை குடும்பத்தினர் எடுத்துக்கொள்ளலாம் என அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல தனது உறவினரின் பெயரை குறிப்பிட்டு அவரிடம் இருந்து 9 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருக்கு அந்த பணத்தை திருப்பித் தருமாறும் அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது சகோதரர் பன்சிலால் சீதா ராமின் மனைவி சோனா மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
