கடந்த 4 வருடமாக இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இதனால் கர்ப்பமான அந்த பெண் 2 குழந்தைகளும் பெற்றெடுத்ததும், அதற்க்கு காரணமான 2 இளைஞர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், 2 குழந்தைகளுக்கு தாயான சிறுமியையும் போலீசார் மீட்டுள்ளனர். 

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த சிறுமி கயல்விழியை, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், வேலுச்சாமி என்ற இளைஞர்கள் மாறி மாறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். செய்து வந்திருக்கிறார்கள். 

இவர்கள் இருவருமே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சிறுமி கயல்விழியை பலமுறை இவர்கள் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர், இதனால் அந்த பெண் 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாள். அதுமட்டுமல்ல இந்த பாலியல் கொடுமையையும், குழந்தை பிறந்த விஷயத்தையும் வெளியே சொல்லக் கூடாது என்று 2 பேருமே சிறுமியை இவ்வளவு நாள் மிரட்டி வந்துள்ளனர். கடந்த 4 வருடமாகவே சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபோதே, இந்த கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், இந்த விஷயம் வெளியே வந்து அனைவரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று 2 பேரில் ஒருவரான வேலுச்சாமியை  கைது செய்துள்ளனர். 

மேலும், சிறுமியின் 2 குழந்தைகளையும் மீட்டு தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ்  போலீசார் ஒப்படைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட கயல்விழியை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான விஜயகுமார் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருகின்றனர்.