நடக்காத சம்பவத்தை இட்டுக்கட்டி பொய்யான முதல் தகவல் அறிக்கை தயாரித்தால், புகாரை பதிவுசெய்தவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் அதற்கு உடந்தையாக இருந்தால் அவர் மீது குற்றநடவடிக்கை எடுக்கலாம்.

காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். குற்றம் எந்த காவல்நிலைய எல்லைக்குள் நடந்ததோ அந்த காவல் நிலையத்தில் மட்டுமே புகார் அளிக்க வேண்டும். வேறு காவல்நிலையத்திற்குச் சென்றால், அங்கிருக்கும் அதிகாரிகள் சரியான காவல்நிலையத்தைச் சொல்லி வழிகாட்ட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை (FIR) எப்படி இருக்கும்?

வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றங்கள், வாரண்ட் இருந்தால் மட்டுமே கைது செய்யலாம் என்கிற குற்றங்கள் என இரண்டு விதமாக குற்றங்கள் உள்ளன. வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு மட்டுமே உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்ய முடியும்.

குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்களை எழுத்துபூர்வமாகவே கொடுக்கப்படவேண்டும். வாய்மொழி புகாராக இருந்தால், அதை காவல்துறை அதிகாரி எழுதி, புகார் கொடுத்தவரிடம் திரும்ப படித்துக்காட்டி கையெழுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு

வழக்கின் விசாரணை எப்போது தொடங்கும்?

புகாரில் சம்பவம் நடந்த தேதி, நேரம், இடம், சம்பவம் எப்படி நடந்த்து என்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். புகாரில் விவரிக்கும் சம்பவத்தை குறைந்தது ஒரு சட்டத்தின் கீழ் குறிப்பிட வேண்டும். புகாரை எழுத்துபூர்வமாக உருவாக்கி புகார்தாரரின் கையெழுத்தையும் பெற்ற பிறகு, அதன் நகலை புகார் கொடுத்தவருக்கு உடனே வழங்க வேண்டும்.

புகாரைப் பதிவுசெய்யும் காவல் அதிகாரியே புலன் விசாரணையைச் செய்யக்கூடாது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததும், குற்றம் தொடர்பான புலன்விசாரணையைத் தொடங்க வேண்டும். சில வழக்குகளில் போதைபொருள் தடுப்பு பிரிவு காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வதற்கு முன்பே விசாரணையைத் தொடங்கும்.

முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த காவல்துறை அதிகாரி ஒரிஜினலை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். புலன் விசாரணை அதிகாரிக்கு ஒரு நகலை வழங்க வேண்டும். மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் ஒரு நகலை அனுப்பி வைக்க வேண்டும். புகார் கொடுப்பவருக்கு ஒரு நகலை கையொடு கொடுத்துவிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல் FIR நகலை நீதிமன்றம் வழங்கும்.

பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்கு! டெஸ் சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்!

FIR எந்த மொழியில் இருக்க வேண்டும்

முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யும்போதுதான் ஒரு குற்ற வழக்கு தொடங்கியதாக அர்த்தம். ஒரு முறை மட்டும்தான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யலாம். ஒரே வகையான அல்லது தொடர்புடைய குற்றங்களை ஒருங்கிணைத்து ஒரே முதல் தகவல் அறிக்கையாகவும் பதிவுசெய்யலாம். ஆனால், ஒரே குற்றத்திற்கு இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை உருவாக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, குற்றம் செய்தவர் தானே முன்வந்தும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.

முதல் தகவல் அறிக்கை மாநில மொழியில்தான் பதிவுசெய்யப்படும். ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கைக்கும் குற்ற எண் (Crime Number) வழங்கப்படும். வழக்கு ஏதேனும் ஒரு மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டால், முதல் தகவல் அறிக்கை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். அதற்கு புதிய குற்ற எண் கொடுக்கப்படும்.

ஓடும் ரயிலில் குற்றம் நடந்தால் ரயிலிலேயே வைத்து ரயில்வே அதிகாரியிடம் முதல் தகவல் அறிக்கை படிவத்தைப் பெற்று முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யலாம்.

FIR ஐ மட்டும் வைத்து நீதிமன்றம் தண்டனை வழங்க முடியாது. முதல் தகவல் அறிக்கையில் தவறு இருப்பது விசாரணை அதிகாரிக்குத் தெரியவந்தால், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது அதை சரிசெய்து வழங்கலாம்.

தகுந்த காரணமின்றி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்க முடியாது. புகார்தாரரும் எழுத்துபூர்வ புகாரில் கையெழுத்திட மறுக்க முடியாது. நடக்காத சம்பவத்தை இட்டுக்கட்டி பொய்யான முதல் தகவல் அறிக்கை தயாரித்தால், புகாரை பதிவுசெய்தவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் அதற்கு உடந்தையாக இருந்தால் அவர் மீது குற்றநடவடிக்கை எடுக்கலாம்.

இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வரலாம்! சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய ஒப்பந்தம்!