புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளி என்னை மிரட்டினார், ஆபாச செல்பிக்களை  மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே என்னை உல்லாசம் அனுபவித்தார் என்று புற்றுநோய் மருத்துவர் தீபா தனது தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளார். 

கனடாவின் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் மருத்துவர் தீபா,  சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவரது டாக்டர் உரிமம் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். புற்றுநோய் ஸ்பெசலிஸ்ட்டான இவர் கடந்த 2010 முதல் டாக்டராக இருக்கிறார். கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவிடம் சிகிச்சை பெற வந்த நோயாளி வடிவத்தில் விளையாட ஆரம்பித்தது.

அந்த நோயாளியுடன் அன்பாக பழகிய அந்த டாக்டரை  காதல் வசப்படுத்தி வெளியில் சுற்றியுள்ளதாக  கூறப்பட்டது. வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் தகவல்களை பரிமாறிக் கொண்டார் என்றும் புற்று நோய்க்கு தீபா சிகிச்சை அளித்தார் என்றும் சொல்லப்பட்டது. கடந்த 2015ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை சிகிச்சை அளித்தார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் லிஸ்ட்டில் இருந்த என்னுடைய பெயரை நீக்கினார் தீபா.  

தன்னோடு உல்லாசத்திற்காக தன்னை பயன்படுத்திக் கொண்டார் என்றும் சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் தீபா மீது அந்த நோயாளி குற்றச்சாட்டை முன் வைத்தார். அப்போது தன்னை விளக்கி வைத்துவிட்டு, வேறொரு நபரை காதலிப்பதாக கூறிய அவர் தன்னை நோயாளிகள் லிஸ்ட்டில் இருந்தே நீக்கிவிட்டதாகவும் கூறினார். 

தீபா மீது  CPS புகார் அளித்த அந்த நோயாளி, நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன்.  தீபா என்னை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் தனக்கு சிகிக்சை அளிக்கவும் மறுத்ததாகவும் அறிக்கையாக சமர்பித்தார். 

இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது தீபா மீது குற்றம் சுமத்திய நோயாளியின் குரல் மட்டுமே ஒலித்தது. அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த தீபா கண்கலங்கி மவுனமாக நின்றுகொண்டிருந்தார்.  இதனால் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீபாவின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கனடாவில் இவர் மருத்துவராக சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. 

இதன் பின் 6 மாதங்கள் கழித்து மருத்துவர் தீபா தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்துள்ளார். அதாவது நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும் பாதிக்கப்பட்டவரே தான்தான் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார். 

மேலும், தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் தான் அனுப்பிய எஸ்எம்எஸ், படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாகவும் தான் மிரட்டப்பட்டதாகவும் டாக்டர் தீபா கூறியுள்ளார். அவமானத்தினால் தான் கூனி குறுகிப்போய் நின்றதால் அப்போது தன்னால் பேசமுடியவில்லை என்று தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றம் கேட்கவேண்டும் என டாக்டர் தீபா முறையிட்டுள்ளார்.