காவல்துறையினரால் 4 ஆண்டுகளாக தேடப்பட்ட வந்த ரவுடியை, அவரது மனைவியும் மைத்துனரும் சேர்ந்து மலை அடிவாரத்தில் கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரால் 4 ஆண்டுகளாக தேடப்பட்ட வந்த ரவுடியை, அவரது மனைவியும் மைத்துனரும் சேர்ந்து மலை அடிவாரத்தில் கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் நாடார் தெருவைச் சேர்ந்தவர் குட்டி என்ற மாடசாமி. பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து மாடசாமியை, போலீஸார் கடந்த 4 ஆண்டுகளாக தேடிவந்தனர்.
இவரது மனைவி சுப்புலட்சுமி , கணவரின் மூத்த சகோதரி ராஜேஸ்வரியிடம் கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வெகு நாட்களை ஆகியும் கடனை திருப்பி தராததால், கடந்த 4 ஆம் தேஹி சுப்புலட்சுமியிடம் தன்னிடம் வாங்கிய பணத்தை உடனே கொடுக்கும்படி ராஜேஸ்வரி நேரில் சென்று கேட்டு உள்ள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றவே, ஒரு கட்டத்தில் சுப்புலட்சுமி ராகேஸ்வரியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், சுப்புலட்சுமி தன்னை ராஜேஸ்வரி தாக்கியதாக சேத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரின் ராஜேஸ்வரியை அழைத்து போலீசார் நேரில் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் சுப்புலட்சுமி தான் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் அந்த புகாரில் கணவர் மாடசாமியை 'லேட்' என குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவை பார்த்த சேத்தூர்காவல் நிலைய போலீஸார், சுப்புலட்சுமியிடம், அவரது கணவர் மாடசாமியை லேட் என குறிப்பிட்டிருந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
இதில், சுப்புலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தான் மாடசாமியை அவரது மனைவியும் மைத்துனரும் சேர்த்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், சுப்புலட்சுமி போலீஸிடம் கொடுத்த வாக்குமூலத்தில், மாடசாமி குடித்து வந்து தன்னை தினமும் அடித்துத் துன்புறுத்தியதாக கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் கடன் அதிகம் வாங்கியதால் அதன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இதுகுறித்து தனது இளையசகோதரர் விஜயகுமாரிடம் தெரிவித்த போது கொலை செய்ய திட்டமிட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதே போல் கணவர் மாடசாமியை, தானும், விஜயகுமாரும் கொலை செய்து புத்தூர் மலை அடிவாரத்தில் புதைத்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.இதைத் தொடர்ந்து ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர், அரசு மருத்துவர் அருண் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் விஜயகுமாரை அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்ட மாடசாமி புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் தோண்டி பார்த்த போது அவரது எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சோதனைக்காக சென்னை அனுப்பி வைத்த போலீசார், சுப்புலட்சுமியையும் விஜயக்குமாரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
