நான் உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் ஆனா உன்னோட அண்ணன நெனச்சாதான் பயமா இருக்குடா என ப்ரியா சொல்ல, பயப்படாத அவனை எங்க அப்பா சமாதானம் செஞ்சிடுவாரு என கடந்த  இந்த அதிபயங்கர ஆணவக்கொலை நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.  

கடந்த செவ்வாய்க்கிழமை சாயங்காலம் சரியாக 5 மணிக்கு கனகராஜின் அண்ணன் வினோத், கனகராஜும் ப்ரியாவும் தங்கியிருந்த வீட்டிற்குள் சென்று டேய்... இந்த கீழ் சாதியைச் சேர்ந்த தெ**** வ கல்யாணம் பண்ண நினைக்காதேன்னு நானும் எவ்ளோவாட்டி சொல்லிட்டேன்... அப்படி அவ கழுத்துல நீ தாலி கட்ட நெனச்சே... இவ கழுத்து மேல தலை இருக்காது'ன்னு சொல்லியிருக்கிறான், ஆனா என்ன மீறி அவளைத் தொட்டுப் பாரு பார்க்கலாம்'னு கனகராஜ் சொல்ல.  உடனே முதுகுல வைத்திருந்த அரிவாளை எடுத்து கனகராஜை... தம்பின்னும் பார்க்காம வெட்டித் தள்ளியது அந்த ஜாதி வெறி தலைக்கேறிய மிருகம்.

 தடுக்க வந்த அந்த இளம் பெண் ப்ரியாவின் தலையிலயும் முகத்துலயும் வெட்டிட்டான். வெறி தீர அரிவாளை வீசியுள்ளது. ரத்த வெள்ளத்துல ரெண்டு ஜீவனும் துடிக்கிறதைப் பார்த்து சந்தோஷப்பட்டு ஓடிவிட்டது இந்த ஜாதி வெறிபிடித்த கொடூர மிருகம்.

சம்பவ இடத்துலயே கனகராஜ் இறந்துபோக, இளம் பெண் ப்ரியாவை மேட்டுபாளையத்துல இருந்து கோயமுத்தூர் ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளார். 
  கனகராஜ் முத்தரையர் சாதிக்குள்ள வர்ற வலையர் சமூகத்தைச் சேர்ந்தவன்.  தர்ஷினி ப்ரியா அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொண்ணு. பக்கத்து பக்கத்து தெருவுல இருக்கறதால பார்த்துப் பேசி பழக்கம்,  இந்தப் பழக்கத்தை கனகராஜ் அண்ணன் வினோத் பலமுறை சொல்லி கண்டிச்சி இருக்கான். ஆனால் அதையும் மீறி அந்த ப்ரியா பொண்ணு கடந்த 3 மாசத்துக்கு முன்னால கனகராஜ் வீட்டுக்கு வந்து பேசிட்ட போயிருக்கு, கனகராஜ் அப்பா அவனோட அண்ணன் கோபத்துல இருக்கறான்.  அவனை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கிறேன்'னு சொல்லி, அந்தப் பொண்ணை திருப்பி அனுப்பிவிட்டாராம் கனகராஜின் அப்பா .

 இந்த சமயத்தில் தான் கடந்த வாரம்  ப்ரியாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த கனகராஜிடம், இந்தப் பொண்ணை  பக்கத்து தெருக்கோடியில காலியா இருக்கற ஒரு வீட்ல வாடகைக்கு இரு. ,நல்லநாள் பார்த்து ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னபடியே வாடகைக்கு அந்த வீட்ல ரெண்டுபேரும் தங்கிஇருக்கிறார்கள் . ரெண்டு மூணு நாள்ல கல்யாணம் பண்றதா பிளான் பண்ணி இருந்துருக்காங்க இருந்தாங்க. ஆனா அதுக்குள்ள கனகராஜ் அண்ணன் வினோத்துக்கு விஷயம் தெரிஞ்சி ஜாதி வெறி புடிச்சு வெட்டி சாய்ச்சுட்டான் எனசொல்கிறார்கள் அந்த பகுதி மக்கள். காதலித்த ஒரே காரணத்திற்காக உயிரைவிட இரண்டு ஜீவன்களும் வெட்டுப்பட்டு மடிந்தது. வெறும் 25 வயதே ஆன இந்த ஜாதி வெறி ஊறிப்போன வினோத் இப்போ கம்பிக்குள் காலத்தை கழிக்கவுள்ளான்.