பிரபல தொழில் அதிபரும், காபி டே உரிமையாளருமான சித்தார்த் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விஜய் மல்லையா வருத்தம் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி தொகையை வங்கிகளின் கடன் வைத்து விட்டு லண்டனில் பதுங்கியுள்ளார். இந்நிலையில் காஃபிடே உரிமையாளர் மரணம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ’’வி.ஜி.சித்தார்த்துடன் எனக்கு மறைமுக தொடர்பு உண்டு. சிறந்த மனிதராக மற்றும் சிறந்த தொழில் அதிபராக இருந்தவர். அவரது கடிதத்தின் உள்ளடக்கத்தில் இருப்பதை அறிந்து, வேதனையடைந்தேன். 

அரசு ஏஜென்சிகள் மற்றும் வங்கிகள் யாரையும் விரக்தியடையச் செய்துவிடுவர். எனக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள். முழு கடனை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பை அளித்தும் என்னை இடைவிடாமல் தொந்தரவு செய்கிறார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொடு ட்விட்டர் பதிவில், ’’மேற்கத்திய நாடுகளில், அரசும், வங்கிகளும் கடனாளிகள், தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த உதவுகின்றன. என் விஷயத்தில், எனது சொத்துக்களை முடக்குவதில் குறியாக இருக்கிறார்களே தவிர, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் தடுக்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள், "நீங்களும் மங்களூருக்கு வந்து நேத்ராவதி ஆற்றில் குதிப்பீர்களா? இதைத்தான் மறைமுகமாக சொல்கிறீர்களா..?’’ என பதில் கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

தயவு செய்து அவரோடு உங்களை ஒப்பிடாதீர்கள். அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஆயிரமாயிரம் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர் கடனாளியாக இருந்த போதும் தனது நிறுவனமான காபி டே ஊழியர்கள் 50 ஆயிரம் பேருக்கு சாவதற்கு முதல் நாள் சம்பளமாக கொடுத்து விட்டுத் தான் இறந்திருக்கிறார்’’ எனவும் பதிலளித்து வருகிறார்கள்.