பொள்ளாச்சியை சேர்ந்தவர் சுப்ரியா  தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். பொள்ளாச்சி ஜோதிநகரில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த திருநாவுக்கரசும், சுப்ரியாவும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகினர்
.
இதைத்தொடர்ந்து மாணவி சுப்ரியாவை திருநாவுக்கரசு  ஊஞ்சவேலாம்பட்டிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து சுப்ரியா  அவரை பார்க்க சென்றபோது திருநாவுக்கரசு, ஒரு காரில் அவரை ஏற்றியுள்ளார். 

பின்னர் திருநாவுக்கரசின் நண்பர்கள்  சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்  ஆகியோரும் காரில் அமர்ந்தனர்.  கார் புறப்பட்டதும் திருநாவுக்கரசர், சுப்ரியாவிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இதை, முன்சீட்டில் அமர்ந்திருந்த சதீஷ், செல்போனில் படம் பிடித்தார்.  அந்த ஆபாச படத்தை காட்டி அனைவரும் சேர்ந்து சுப்ரியாவிடம்  பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அவர் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்தனர். மாணவி கூச்சல் போட்டதை தொடர்ந்து, காரில் இருந்து இறக்கி விட்டு சென்றுள்ளனர். 

இதன் பின்னரும் திருநாவுக்கரசு  செல்போனில் சுப்ரியாவை தொடர்பு கொண்டு பணம் தராவிட்டால் ஆபாச படங்களை வெளியிடுவோம் என மிரட்டினார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பொள்ளாச்சி கிழக்குப்பகுதி போலீசார், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து திருநாவுக்கரசு உள்பட 4 பேரை தேடி வந்தனர். 

இந்நிலையில் ஜோதிநகர் பகுதியில்  இருந்த சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரை, கிழக்கு போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.  அவர்களிடம் விசாரணை செய்தததில் 100 பெண்களை முகநூல் மூலம் பழகி தங்களது ஆசை வலையில் சிக்க வைத்துள்ளதும், அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்ததது.

இதையடுத்து திருநாவுக்கரசை  தேடி வந்தனர். இதனிடையே தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசு போலீசாருக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் ஒரு பொண்ணுதான் உங்ககிட்ட புகார் பண்ணிருக்கா… இன்னும் 99 பொன்ணுங்க எங்க பக்கம் இருக்காங்க… உங்களால்  ஒன்றும் செய்ய முடியாது.. நானே சரண்டர் ஆகிவிடுவேன்… அது மட்டுமல்ல இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள்  என மிரட்டல் விடுத்துளளார். அது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.