Asianet News TamilAsianet News Tamil

Crime News: சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை.. இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்..!

சென்னை குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதீஷ்(29). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

Viduthalai Chiruthaigal Katchi leader murder in chennai
Author
First Published Apr 25, 2023, 2:24 PM IST | Last Updated Apr 25, 2023, 2:24 PM IST

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதீஷ்(29). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கும், இவரது அண்ணன் மகன்களான சுகாஷ், சுனில் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி குடும்பச்சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

Viduthalai Chiruthaigal Katchi leader murder in chennai

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம் போல் அதீஷிடம் போதையில் இருந்த அவரது அண்ணன் மகன்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆத்திமடைந்த சுகாஷ், சுனில் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதீஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அதீஷின் அண்ணன்கள் சுகுமார், முரளிக்கு வெட்டி விழுந்துள்ளது. இதனையடுத்து, தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பித்தனர். 

இதில், படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில், அதீஷ் மருத்துவமனை செல்லும் வழிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Viduthalai Chiruthaigal Katchi leader murder in chennai

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்  தப்பியோடிய சுனில், சுகாஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios