நான்கு சுவற்றுக்குள் நடப்பதை நாலாயிரம் பேருக்கு காட்டினால் அப்படித்தான் நடக்கும் என ’பொலிகாளை’காசி பேசியுள்ள அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது.  

ஸ்கூல் பிள்ளைகள், முதல் பெண் டாக்டர் வரை கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளதாக கன்னியாகுமரி காசி மீது குற்றம்சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏகப்பட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

26 வயதாகும் காசிக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் யார்?  எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையில் போலீஸார் இறங்கி உள்ளனர்.  கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில்தான் பொள்ளாச்சி சம்பவம் குறித்து காசி வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் சக்கைபோட்டு போட்டு வருகிறது. இதுகுறித்து காசி அந்த வீடியோவில், ‘’பொள்ளாச்சி வழக்கு என்னவென்று தெரியாமல் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பையன்களுக்கு அந்தப் பெண்ணின் அண்ணன்கள் மிகவும் நெருக்கமான நண்பர்கள். இது தெரிந்த பிறகும் ஃபேஸ்புக்கில் அந்தப்பெண் பையன்களுடன் சேர்ந்திருக்கிறார். 

வெளியில் சென்றிருக்கிறார்கள். அப்போது தெரியவில்லையா அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று? அப்போது வீட்டில் அம்மா, அண்ணனிடம் சொல்லி இருக்க வேண்டியதுதானே? ஆனால் அந்தப்பெண் தெரியப்படுத்தவில்லை. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் பையன்கள் செய்வதையே நாங்களும் செய்வோம் என்கிற நினைப்பிற்கு வந்துவிட்டீர்கள். ஒரு விஷயத்தை இயற்கையால் மாற்ற முடியாது. பையன்களோடு உங்களால் அவர்களது உடலோடு எப்போதும் போட்டி போட முடியாது.

நான்கு சுவர்கள் பார்த்துக் கொண்டிருந்த விஷயங்களை நான்காயிரம் பேர் பார்ப்பது போல டிக் டோக், ஃபேஸ்புக்கில் அவிழ்த்துப் போட்டு ஆடி காட்டுகிறீர்கள். உங்களுக்கு அமெரிக்க கலாச்சாரம் தான் வேண்டுமென்றால் அமெரிக்காவுக்குச் சென்று விடுங்கள். உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை சொல்கிறேன் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் வளர்கிற கண்ணுகுட்டி ரோட்டுக்கு தான் போவேன் என்றால் ரோட்ல லாரியில் அடிபட்டு சாவதை யாராலும் தடுக்க முடியாது’’எனப்பேசியுள்ளார்.