நாளிரவு நேரத்தில் 5 பெண்களுடன் கும்மாளம் அடித்த பிரபல ரவுடி வீச்சு தினேஷை போலீசார் விரட்டியதில் கீழே விழுந்து மாவுக்கட்டு போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளிரவு நேரத்தில் 5 பெண்களுடன் கும்மாளம் அடித்த பிரபல ரவுடி வீச்சு தினேஷை போலீசார் விரட்டியதில் கீழே விழுந்து மாவுக்கட்டு போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த வீச்சு தினேஷ் ஒரு ஃபேமஸான ரவுடி. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என இவர் பேரில் இல்லாத கேஸ்களே இல்லை,2016-ல் தன்னுடைய உயிர் நண்பன் சந்தோஷை பாலாற்றில் உயிரோடு புதைத்து கொன்றவர். ஜெயிலுக்கு போய் ஜாமீனிலும் வெளியே வந்தும் ஒருவரை ஓட.. ஓட.. விரட்டி கொன்ற வழக்கிலும் முதல் குற்றவாளி. இது சம்பந்தமாகத்தான் போலீஸ் இவரை தேடி வந்த நிலையில் மற்றவர்கள் சிக்கினார்களே தவிர வீச்சு தினேஷ் மட்டும் சிக்கவில்லை.

இந்த சமயத்தில்தான், வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தினேஷ் உள்ளதாக ரகசிய தகவல் வந்தது, பலநாள் காத்திருந்த போலீஸார், ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு செய்தனர். நள்ளிரவு இரவு நேரம், அதிரடியாக நுழைந்த தனிப்படை போலீஸார் வீட்டை சுற்றிவளைக்க அங்கே 5 பெண்களுடன் தினேஷ் படு குஜாலாவாக இருந்தார். அவருடன் நண்பர் செல்வராஜும் இருந்தார். போலீசாரை பார்த்ததும், அலறி துடித்து ஓடினார் தினேஷ். இருட்டில் தாறுமாறாக ஓடி, கால் ஒடிந்து கீழே விழுந்து விட்டார். 

அவரை விரட்டி சென்ற போலீசார், போதையிலும் வழியால் அலறித்துடித்த வீச்சு தினேஷை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்று மாவு கட்டு போடப்பட்டது. இப்போதும் சிகிச்சையில்தான் உள்ளார் தினேஷ். மேலும் வீட்டில் 5 பெண்களும் கைது செய்யப்பட்டு, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வீடு வாடகைக்கு வீட்டின் உரிமையாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.