வேலூர் அருகே கள்ளக்காதல் மோகத்தால் இடையூறாக இருந்த 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரியைச் சேர்ந்த சந்தியா (20). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தொட்டிகிணறு என்னுமிடத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ரோ‌ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. 

கடந்த ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ரோ‌ஷனுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர் பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் வேறு ஒருவருடன் முறையற்ற உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் குழந்தையை கொன்றுவிட்டுவா உன்னை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தமது 2 வயது மகளை விஷ ஊசி போட்டு தாய் சந்தியா கொலை செய்துள்ளார். அந்த கொலை தொடர்பாக சந்தியா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விஷ ஊசியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

அண்மைக்காலமாக தகாத உறவால் பெற்ற பிள்ளைகளை தாய் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குன்றத்தூர் அபிராமி, சேலம் பிரியங்கா, நீலகிரி சஜிதா ஆகியாரை தொடர்ந்து வேலூரைச் சேர்ந்த சந்தியாவும் இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்.