வேலூரில் சினிமா பாணியில் மயக்க ஸ்பிரே அடித்து மாணவியை ஆசைதீர பலாத்காரம் செய்த கல்லூரி ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். இவர் கே.வி.குப்பத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி இளம்பெண்ணுக்கு திடீரென உடல்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  சென்றுள்ளார். அப்போது, மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்த போது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனே இதுதொடர்பாக  வேலூர் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது மாணவி கூறுகையில்;- கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு தந்தையின் செல்போனில் ஒருவர் தெரிவித்ததாகவும், அதன்பேரில் புறப்பட்டு சென்றபோது கல்லூரி அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்மநபர் திடீரென முகத்தில் மயக்க ‘ஸ்பிரே’ அடித்தார். கண்விழித்து பார்த்தபோது ஓர் அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அருகே கல்லூரியில் பணிபுரியும் பிரதாப் என்பவர் இருந்தார். இதுபற்றி வெளியில் சொன்னால், கொன்று விடுவதாக மிரட்டினார். அதனால் எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என்று மாணவி தெரிவித்தார்.

இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் என்பரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மாணவியின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்பு கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரதாப் கைது செய்யப்பட்டார்.