பள்ளி மாணவிகள், குடும்பப்பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் பலவந்தமாக உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து சீரழித்த மோகன்ராஜை கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி நீக்கிவிட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சொல்லப்படுகிறது. 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் , இளம் பிள்ளை பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு பொது கழிப்பறை உள்ளது. இந்த பாத்ரூமூக்குள் ஒரு இளைஞரை ஹோமோசெக்ஸூக்கு மோகன்ராஜ் அழைத்ததாக புகார் வந்ததையடுத்து, மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர்.
 
இந்த கேப்பில், சோஷியல் மீடியாவில் கல்யாணம் ஆன பெண்ணை மோகன்ராஜ் மிரட்டி, தாக்கி, கட்டாயப்படுத்தி உல்லாசத்தில் அனுபவித்த சில்மிஷ வீடியோ ஒன்றும் வெளியானைத்தை அடுத்து மோகன்ராஜ் செல்போனை பிடுங்கி பார்த்த போது, 7 பெண்களை நாசம் செய்த வீடியோ இருந்ததை கண்டு அதிர்ந்து போன போலீஸ் விசாரணையை தீவிரமாக்கியது. விசாரணையில் இவர், இளம்பிள்ளை விசிக சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஆட்டோவில் ஏறும் இளம் பெண்கள், குடும்பப்பெண்கள் என  பேச்சு கொடுத்து, செல்போன் நம்பரை தந்திரமாக வாங்கி வைத்து கொண்டு, பிறகு மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதே போல சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்களை மோகன்ராஜ் சீரழித்துள்ளான்.

கல்யாணம் ஆன பெண்கள் தவிர, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி என தன்னிடம் சிக்கும் பெண்களை தான் மட்டும் அனுபவிக்காமல் தனது நண்பர்களுக்கும் விருந்தளிப்பது என பலான பலனா தொழில்களையும் செய்து வந்துள்ளான். ஒரு சில பெண்கள் இவனுக்கு பயந்து ஊரைவிட்டே ஓடிப்போன சம்பவமும் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமில்லை, கட்சி பெயரை சொல்லிதான் பல பெண்களை மிரட்டி இருக்கிறார் என்றும் தெரியவந்தது.

ஆனால், மோகன்ராஜ் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தியதால் அவரை கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி நீக்கிவிட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கியதாக சொல்லப்படுகிறது ஆனால், இன்னும் ஆதாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. எனினும் யாராக இருந்தாலும், தவறு செய்தவர்களை தண்டிப்பது அவசியம் என்று விசிக தெரிவித்துள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.