கல்யாணம் ஆகி, காலேஜ் படிக்கிற அளவுக்கு ஒரு மகளும் உள்ள நிலையில், அதிமுக வட்ட செயலாளர் வணக்கம் சோமுவுக்கு இங்கிலீஷ் டீச்சர் மீது மானாவாரியா லவ் வந்துள்ளது. இந்த லவ் மேட்டரால் டீச்சரை கடத்தி அடையவேண்டும் என வ.செ வணக்கம் சோமுவால் திருச்சி அதிமுக பரபரப்பாக இருக்கிறதாம் 

வணக்கம் சோமு 2009-ல் அதிமுகவில் இணைந்தார். கடுமையாக பணியாற்றியதால் இவரது செயல்பாடுகளை கண்டு மிரண்ட தலைமை, திருச்சி மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவியும் கொடுத்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் பயங்கர பேமஸ் கை பல போராட்டங்களை முன்னெடுத்த முக்கிய புள்ளி. இப்போது ஒரு டீச்சரை இவர் கிட்னாப் பின்னதாக புகார் எழுந்துள்ளது.  

திருச்சி மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் இந்திரா காந்தி கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை ஆண்டாள் வீதி பகுதியில் மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்சில் காத்திருந்த நபர்கள் பேராசிரியர் மகாலட்சுமியை கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் சென்றபோது, மகாலட்சுமி அலறி சத்தம் போட்டுள்ளார். ஒரு மணி நேரமாக மகாலட்சுமி இவ்வாறு சத்தம் போடவும், துவரங்குறிச்சி என்ற இடத்தில், அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அவரை இறக்கி விட்டு கடத்தல்காரர்கள் பறந்துள்ளனர். 

இதன்பின்னர், அங்கிருந்தபடியே மகாலட்சுமி போலீசுக்கு புகார் சொல்லி உள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் உட்பட போலீசார் மகாலட்சுமியை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, விசாரணையில், வட்ட செயலாளர் வணக்கம் சோமுவுக்கு டீச்சர் மீது ஒரு தலை யாக லவ் இருந்துள்ளது. அவர், எங்கெங்கு போகிறாரோ, அங்கெல்லாம் பின்னாடியே சென்று வணக்கம் சோமு லவ் டார்ச்சர் செய்கிறாராம். 

சில மாதங்களாகவே டீச்சரிடம் இப்படித்தான் நடந்து கொள்வதாகவும், இந்த ஒரு தலைகாதல் விவகாரத்தால்தான் கிட்னாப் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கடத்தல் மேட்டர் பெரிதானதால், டீச்சரை மேல மானாவாரியா லவ் வைத்ததால் கடத்திய சோமுவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, காலேஜில் படிக்கும் அளவுக்கு ஒரு மகளும் இருக்கிறாராம். 

மேட்டர் என்ன என விசாரிக்க பார்த்தால், வணக்கம் சோமு-வை இப்போது எஸ்கேப்பாம், இதனால் வ.செ வணக்கம் சோமுவுக்கு போலீசார் வலைவிரித்துள்ளனர்.