காதலனை நம்பி வந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளாமல் நாளுக்கு நாள் கொடுமை படுத்தியும், வேறொரு பெண்ணோடு தகாத உறவு வைத்துக்கொண்டு, கர்பமாக இருந்த மனீஷாவை குத்தியே கர்ப்பத்தை கலைத்துவிட்டு கொடுமைப்படுத்தி கொன்ற விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த அபின்ராஜ் வேன் டிரைவர், இவர் அதேபகுதியை சேர்ந்த மனிஷா என்ற பெண்ணை கடந்த 5 வருஷமாக காதலித்து வந்துள்ளார். கடந்த  வருடத்துக்கு முன், கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, அவரது வீட்டில் இருந்து அழைத்து கொண்டு போய், சொந்தக்காரர் வீட்டில் தங்க வைத்துள்ளார். காதலனை நம்பி வந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளாமல் நாளுக்கு நாள் கொடுமை படுத்தியும், வேறொரு பெண்ணோடு தகாத உறவு வைத்துக்கொண்டு, கர்பமாக இருந்த மனீஷாவை குத்தியே கர்ப்பத்தை கலைத்துவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர் வேறு வழியின்றி அவனையே நம்பியிருந்த அந்த பெண்ணை, கல்யாணம் செய்துகொண்டு கல்யாணம் முடிந்து 7 நாளில் கொலை செய்துள்ளார். 

மகள் இப்படி அநியாயமாக தற்கொலை செய்து கொண்டாரே என்று நினைத்து, தனக்கு உறவினர் யாரும் இல்லாததால் சென்னையிலேயே உடல் அடக்கம் செய்துள்ளார்.  மனீஷா மறைந்ததற்கு பின், மனிஷாவின் செல்போனை பார்த்தபோது அதில் ஷாக் ஆடியோ ஒன்று இருந்தது. அந்த ஆடியோவில், அபின் ராஜுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்துள்ளது, அந்தப் பெண்ணிடம் மனிஷா தாலி பிச்சை கேட்டு அழுததும், ஏற்கனவே கர்ப்பம் கலைத்தது பற்றியும் பேசியது கேட்டு துடிதுடித்து போயுள்ளனர்.   

இதுகுறித்து பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில்; என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் புளியங்குடி. நான் சென்னையில ஒரு இன்ஜினீயரிங் காலேஜ்ல பஸ் டிரைவராக வேலை பார்க்கிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் மனிஷாவுக்கு 3 வயது இருக்கும்போது என் மனைவி இறந்துவிட்டாள். பல கஷ்டங்களை சந்தித்து மகனையும், மகளையும் வளர்த்தேன். இரண்டு பேரையும் இன்ஜினீயரிங் படிக்க வைத்தேன் என ஆரம்பிக்கும் போது கண்ணீரோடு கூறியுள்ளார்.

நான் பணியாற்றும் இன்ஜினீயரிங் காலேஜ்ல தான் மனிஷா இன்ஜினீயரிங் படித்தார். திடீரென ஒரு நாள் டிரைவர் அபின்ராஜிம் மனிஷாவும் காதலிப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனால், மகளையும் அபின்ராஜையும் கண்டித்தேன். திரிசூலம், லட்சுமணன் நகரில் இருந்தால் பிரச்னை என்பதால் வீட்டை அனகாபுத்தூருக்கு வந்துவிட்டேன்.

அதன் பின் மகளின் காதலை மறந்துவிட்டேன். ஆனால் அவர்கள் இருவரும் எனக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு  எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், மனிஷாவை அழைத்துக்கொண்டு செல்கிறேன் என்று கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னிடம் போனில் பேசியவரிடம் நீங்கள் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் அபின்ராஜ் என்று கூறினார். இதனால், என் மகளின் செல்போனில் பேசினேன். அந்த போனையும் அபின்ராஜ் எடுத்து பதிலளித்தார்.

கல்லூரியில் மாணவர்களை இறக்கிவிட்டு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீஸார் அபின்ராஜிடம் பேசினார்கள். அப்போது மாலையும் கழுத்துமாக இருவரும் வந்தார்கள். போலீஸாரிடம் நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் நண்பர்கள், உறவினர்கள் சாட்சியாக கல்யாணம் செய்து கொண்டதாகக் சொன்னார்கள். அப்போ என் மகளிடம், `நீ படித்துமுடித்துவிட்டு அபின்ராஜை கல்யாணம் செய்து கொள் என கூறினேன். ஆனால் அவர் கேட்கல. என் பேச்சை மட்டும் கேட்டிருந்தால் இப்போ என்மகள் உயிரோடு இருந்திருப்பா.

வீட்டை விட்டு வெளியில் சென்ற நாள் முதல் மனிஷா என்னிடம் பேசவில்லை. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாலையில் திரிசூலத்திலிருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர், மனிஷா இறந்துவிட்டதாகக் கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். குரோம்பேட்டை மருத்துவமனை பிணவறையில் என் மகளை பிணமாக பார்த்தேன்.  இதனையடுத்து போலீசில் என் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்தேன். எனக்கு சொந்தம் என யாரும் இல்லாததால் குரோம்பேட்டையில் உள்ள மயானத்திலேயே மனிஷாவின் உடலை தகனம் செய்தேன்.  

என் மகள் இறந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த எனக்கு திரிசூலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் மனிஷா மரணம் பற்றி முக்கியமான ஆதாரம் இருப்பதாக சொன்னார். உடனடியாக அந்த நபரிடம் அந்த ஆதாரத்தைக் கேட்டேன். அவரின் போனுக்கு மனிஷா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அந்த ஆடியோவைக் கேட்டு நான் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.

தாலி பிச்சைக் கேட்டு அனிதா என்ற பெண்ணிடம் மனிஷா கதறி அழுவதை என்னால் கேட்க முடியவில்லை. என் மகளுக்கு நடந்த கொடுமை, எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. என் மகள் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன. நள்ளிரவில் என் மகள் இறந்த தகவல் லட்சுமணன் நகரில் உள்ள பலருக்குத் தெரிந்துள்ளது. அதுமட்டுமல்ல, மனிஷாவின் கழுத்து, காலில் ரத்தக் காயங்கள் உள்ளன. அவர் தூக்குப் போட்டதால் கழுத்தில் காயங்கள் இருப்பதாக போலீஸார் சொல்கின்றனர்.