Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்பெக்டர் கழுத்தை கடித்துக் குதறிய கொடூர டிரைவர்!! கைது செய்து செம கவனிப்பு...

வெள்ளை சீருடை அணிந்த போக்குவரத்து ஆய்வாளரை அலேக்காக தரையில் தள்ளி, குத்து குத்து என குத்திய சின்ன யானை டிரைவரின் செயலைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ந்தே போய்விட்டனர். இந்த சம்பவம் நடந்தது ராமநாதபுரம் டவுன் கேணிக்கரை சந்திப்பில் தான்.

van driver karnan fight with traffic police vijayakanth
Author
Chennai, First Published May 16, 2019, 12:41 PM IST

வெள்ளை சீருடை அணிந்த போக்குவரத்து ஆய்வாளரை அலேக்காக தரையில் தள்ளி, குத்து குத்து என குத்திய சின்ன யானை டிரைவரின் செயலைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் அதிர்ந்தே போய்விட்டனர். இந்த சம்பவம் நடந்தது ராமநாதபுரம் டவுன் கேணிக்கரை சந்திப்பில் தான்.

இன்று, கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் மினி வேன் டிரைவர் செய்த காரியத்தை கேட்டால் அனைவருக்கும் கதிகலங்கத்தான் செய்யும். கேணிக்கரை சந்திப்பில் வழக்கம் போல, தனது போக்குவரத்து பணிக்காக இன்ஸ்பெக்டர் காவலர் சத்யராஜ், பெண்காவலர் சுமித்ரா ஆகியோர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சென்ற மினி வேன் ஒன்று அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றிக்கொண்டு வந்தது.

அந்த வேனை ஒட்டி வந்தவர் தான் உச்சிப்புளி துத்திவலசையை சேர்ந்த கர்ணன், காவலர் சத்யராஜ், பெண் காவலர் கையை காட்டி தங்கள் பக்கம் வருமாறு கூறினார் . ஆனால், கர்ணன் அவர்களுடைய உத்தரவுக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து தனது மினிவேனை இயக்கினார். இதனால் டென்ஷானான இன்ஸ்பெக்டர் விஜயகாந்த், வேன் டிரைவர் கர்ணனை சட்டையை பிடித்து வெளியே இழுத்துள்ளார்.

ஆனால், பதிலுக்கு மல்லுக்கட்டி கர்ணனும் மினி வேன் கதவை திறக்கமாலும் கீழே இறங்காமலும், வண்டியை நிறுத்தாமல் வாகனத்தை இயக்கியபடியே விஜயகாந்த்துடன் வெறித்தனமாக மோதியுள்ளார். இறுதியில் காவலர்களுடன் சேர்ந்து கீழே இழுத்து வந்துள்ளார் போலீசார்.

van driver karnan fight with traffic police vijayakanth

வெளியே பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள், சீரியல காட்சிக்காகவும் இல்லை சினிமா சூட்டிங்  நடத்தப்படும் காட்சிகள் என பார்த்துக்கொண்டிருந்தனர். பின்னர் தான் சம்பவம் நிஜம் என நம்பிய பொதுமக்கள் கடுமையாக சண்டை போட்டுக்கொண்டிருந்த டிரைவர் கர்ணனையும், இன்ஸ்பெக்டர் விஜயகாந்த்தையும் விலக்கிவிட்டனர். ஆனால், ஒரு கட்டத்தில் டிரைவர் கர்ணன், கேப்டன் விஜயகாந்த்தைப் போல எகிறி இன்ஸ்பெக்டர் விஜயகாந்த்தை  அடிக்க தொடங்கினார். நிலைகுலைந்து போன இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் தொம்மென கீழே விழுந்தார். இதை எதிர்பார்க்காத பொதுமக்க மற்றும் காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர் 

சுமார் அரை மணி நேரம் கழித்துதான் அங்கு நடந்த சம்பவத்தின் உண்மையும் புரிய வந்துள்ளது. காரணம் இரண்டாவது முறை கீழே விழுந்த விஜயகாந்த்தால் எழவே முடடியவில்லை, பின்னர் அவரை சோதித்து பார்த்ததில், அவர் மீது அமர்ந்து குத்தியது மட்டுமல்ல, கழுத்தை கடித்து குதறியதும் தெரியவந்தது. குரங்கு கடித்து குதறியதைப்போல கர்ணனின் செயல் உள்ளதாக அப்பகுதிமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.எழுந்து நடக்கவே முடியாத இன்ஸ்பெக்டர் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தற்போது கழுத்தில்  ஐந்து தையல் போடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வேன் டிரைவர் கர்ணனனை ஸ்டேஷனில் வைத்து செம கவனிப்பு கவனித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios