கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ரம்யா (18 வயது) என்ற  கல்லூரி மாணவி கடந்த ஜனவரி 31-ந்தேதி வீட்டை விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தனது மகள் வராததால் அவரது பெற்றோர் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரில் இன்ஸ்பெக்டர்   தலைமையிலான போலீசார் கல்லூரி மாணவி ரம்யாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவி ரம்யாவிடம் ஆசைவார்த்தை கூறி சவுக்கத்அலி பழனிக்கு கடத்திச்சென்று தங்கும் விடுதியில் அடைத்து வைத்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து மாணவியையும், வாலிபரையும் போலீசார் மீட்டு கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், கோவை கணபதி பகுதியில் மாணவி வசித்து வந்தபோது அதேபகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சவுக்கத் அலி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். டிரைவர் சவுக்கத் அலி திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர். குனியமுத்தூர் பகுதிக்கு மாணவி குடிவந்த போதும், சவுக்கத் அலி அவரிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

கல்லூரி மாணவிக்கு காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருப்பூர் மற்றும் பழனியில் விடுதி அறை எடுத்து தங்க வைத்து சவுக்கத்அலி பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சவுக்கத் அலி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.