நடிகை சலோனி சோப்ரா மற்றும் அவருடன் இணைந்துகொண்ட மேலும் இருநடிகைகளின் படுபயங்கரமான பாலியல் புகார்களைத் தொடர்ந்து தான் இயக்கிவந்த, ‘ஹவுஸ்ஃபுல்4’ படத்திலிருந்து விலகினார் இயக்குநர் ஷைஜத் கான்.

இன்று காலை  நடிகை சலோனி சோப்ரா, இயக்குனர் சைஜத் கானின் வண்டவாலங்களை ட்விட்டரில் ஏற்றினார். இதைத் தொடர்ந்து சைசத் கானால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு நடிகைகள் அவரது பாலியல் வக்கிரங்களை கொட்டித் தீர்த்திருந்தனர். இச்செய்தி இன்று காலை முதலே பாலிவுட் வட்டாரத்தில் பற்றி எரிந்துகொண்டிருந்தது. இனியும் மௌனம் காக்க முடியாது என்று உணர்ந்த சைஜத் கான் படத்தை விட்டு வெளியேறினார். 

வெளியேறிய பின்னர் "சில நடிகைகள் என் மீது வைத்த புகார்களைத் தொடர்ந்தும், எனது குடும்பத்திற்கு தரப்படும் அழுத்தம் காரணமாகவும் நான் இயக்கும் ‘ஹவுஸ்ஃபுல்4’ பட இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த ட்வீட் வெளிவரும் முன்பே படத்தின் ஹீரோ அக்‌ஷய் குமார் தயாரிப்பாளர் உடனே படப்பிடிப்பை நிறுத்தவேண்டும். வந்த செய்திகள் உண்மையெனில் இயக்குநராக ஷைஜத் கான் தொடரக்கூடாது என்று குரல் கொடுத்திருந்தார்.

இதில் இந்திக்கு ஒரு நியாயம் தமிழுக்கு ஒரு நியாயமா?  சம்பந்தப்பட்ட இயக்குநர் படத்திலிருந்து வெளியேறியது போல்,  உண்மையை காலம் சொல்லும்வரை வைரமுத்து பாடல் எழுதுவதை நிறுத்துவாரா? அல்லது இயக்குநர்கள் அவருக்கு வாய்ப்பு தருவதை நிறுத்துவார்களா?  இதற்கும் அதே காலம்தான் பதில் சொல்லவேண்டும்.