தற்போது காமப்பேரரசு எதிர்ப்பாளர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக நடிகர்கள் பிரகாஷ்ராஜும், சித்தார்த்தும் சேர்ந்துகொள்ள கதிகலங்கிப்போயிருக்கிறார் கள்ளிக்காட்டு இதிகாச நாயகன்.

தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் மவுனம் காத்துவரும் நிலையில், 5முறை தேசியவிருதுகள் பெற்ற கவிஞர் என்கிற அடிப்படையில், வட இந்திய சேனல்கள் வைரமுத்துவை வச்சு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இறுதியாக, செய்வது அறியாது திகைத்து நிற்பது என்று சொல்வார்களே அப்படி ஒரு நிலைக்கு ஆளாகிவிட்ட வைரம் நேற்று இரவு, இன்னும் MEETOO’ வில் இடம்பெறாமல் இருக்கிற, இயக்குநர் இமயம் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து சில மணிநேரங்கள் கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

‘ஆண்டாள்’ விவகாரத்தை மனதில் வைத்துக்கொண்டு சில பிராமணர்கள் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து என்னைப் பழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இனியும் அமைதிகாத்தால் மிகவும் விபரீதமாகிவிடும்.

ஜாதிப்பிரச்சினையை அதே ஜாதிப்பிரச்சினையால் எதிர்கொண்டால்தான் சமாளிக்கமுடியும். நீங்கள் நம்மவர்களை ஒன்று திரட்டி உடனே ஏதாவது செய்யுங்கள். இல்லாவிட்டால் என்னை சினிமாவை விட்டே அப்புறப்படுத்திவிடுவார்கள்’ என்று கதறியிருக்கிறார்.

தனது முகமூடி கிழிந்து தொங்க ஆரம்பிக்கிறபோது மனிதருக்கு புத்தி எவ்வளவு கீழ்த்தரமாக வேலைசெய்கிறது பாருங்கள்.