உத்தரபிரதேச .பி.மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச்சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு இளைஞர்கள் கடத்திச்சென்று பலாத்காரம் செய்தனர். போலீஸ் புகார் அளித்ததன் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் வந்தார். அப்போது பலாத்கார குற்றவாளிகள் இருவர் மற்றும் மேலும் மூன்று பேர் என ஐந்து பேர் அப்பெண்ணை வழிமறித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர்.

90 சதவீத தீக்காயங்களுடன் இளம் பெண் ,லக்னோ எஸ்.பி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைகக்காக ஏர்ஆம்புலன்ஸ் மூலம் டில்லி சப்தர்ஜங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்குமிகவும் கவலைக்கிடமான நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீசார் தீ வைத்த 5 பேரை கைது செய்தனர்.