உத்தர பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று போபாலுக்கு கடத்தி 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியை அந்த இறக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.
கடத்தி கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக புகார் செய்ய சென்ற சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று போபாலுக்கு கடத்தி 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியை அந்த இறக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக லலித்பூரில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க சென்றனர். அப்போது, தனக்கு நேர்ந்த கூட்டு பலாத்காரம் பற்றி வாக்குமூலம் பதிவு செய்வதற்காக உதவி செய்வது போல் போலீஸ் அதிகாரி நடித்துள்ளார்.

இந்நிலையில், காவல் நிலையப் பொறுப்பாளர் அதிகாரி திலக்தாரி சரோஜ் சிறுமியை காவல் நிலையத்திற்குள் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அங்கு மீண்டும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பிறகு அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சைல்டு லைன் ஹெல்ப்பில் கூறியதும் அவர்கள் அனைவரும் அந்த சிறுமியை அழைத்து சென்று உயரதிகாரிகளிடம் புகார் கூறினார். பின்னர், அப்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி உள்பட அனைவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்து அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
