உத்தரபிரதேசத்தில் உயிரியல் பூங்கா அருகே பெண் ஒருவர் பலாத்காரம் செய்து ஆசிட் கொண்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறது. இந்த மாநிலத்தில் கொலைகளும், பாலியல் பலாத்கார சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட செல்கிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில் கடார்னியாகட் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இந்த வனப்பகுதியை ஒட்டிய ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆசிட் போன்ற வேதிப்பொருள் கொண்டு எரிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக அந்த சடலம் இருந்துள்ளது.

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண்ணின் முகம் உள்ளிட்ட பகுதிகள் ஆசிட் கொண்டு எரிக்கப்பட்டுள்ளதால் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற முழு விவரம் தெரியவரும்.

இதேபோல், பிஜோனூர் மாவட்டத்தில் பெண் ஒருவரை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவேறு சம்பவத்தால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.