சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததை அடுத்து, பெற்றோர் அவரை தேடிச் சென்றனர். வெகுநேர தேடலுக்குப் பின் சிறுமி காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார். 

உத்திர பிரதேச மாநிலத்தின் பட்டேபுர் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கற்பழித்தார். இந்த விவகாரத்தில் சந்த்பூர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியான இளைஞரை விரைந்து கைது செய்தனர். இந்த நிலையில், குற்றவாளி கைதான மறுநாளே பாதிக்கப்பட்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காட்டுப் பகுதி:

15 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க காட்டுப் பகுதிக்குள் சென்று இருக்கிறார். அப்போது அந்த இடத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததை அடுத்து, பெற்றோர் அவரை தேடிச் சென்றனர். வெகுநேர தேடலுக்குப் பின் சிறுமி காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார். 

இதை அடுத்து சிறுமியை தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற குடும்பத்தார், சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அழைந்து வந்தனர். இந்த நிலையில் தான் சிறுமி மன வேதனையில் புதன் கிழமை காலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடனே பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி உயிரிழந்து விட்டார்.

விசாரணை:

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து குற்றவாளியான இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.