நமாஸ் செய்ய பஸ்ஸை நிறுத்தியதால் பணிநீக்கம்! மனமுடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் தற்கொலை!

ஜூன் மாதத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, உ.பி போக்குவரத்துத் துறை எந்த முன்னறிவிப்பும் இன்றி மோஹித் யாதவை வேலையில் இருந்து அகற்றிவிட்டது.

UP Conductor Sacked After Stopping Bus For Namaz, Dies By Suicide sgb

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பயணிகள் தொழுகை செய்வதற்காக அரசுப் பேருந்தை நிறுத்தியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துனர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டதற்காக இந்தப் பலனை அனுபவிக்க வேண்டியிருப்பதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் கூறுகின்றனர்.

சென்ற ஜூன் மாதம் பரேலி - டெல்லி ஜன்ரத் இடையே இயக்கப்படும் பேருந்தை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் நிறுத்தச் செய்துள்ளார் நடத்துநர் மோஹித் யாதவ். மனிதநேயத்துடன் செய்த இந்தச் செயலுக்காக, நடந்துநர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு வேலை இல்லாமல் இருந்த அவர், பண நெருக்கடியைத் தாங்க முடியாமல், திங்கட்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

எட்டு பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான மோஹித் யாதவ் மட்டும்தான் ஒரு வேலையில் இருந்துள்ளார். அரசுப் போக்குவரத்துத் துறையில் ஒப்பந்தத் தொழிலாளியாக நடத்துநர் பணி செய்துவந்த அவர் மாதச் சம்பளமான ரூ.17,000 பெற்றுவந்தார். இதை வைத்துதான் அவரது குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, மோஹித் பல இடங்களில் விண்ணப்பித்தும் வேறு வேலை கிடைக்கவில்லை.

140 கோடி இந்தியர்களை வேவு பார்க்க இஸ்ரேல் கருவிகளை வாங்கும் மோடி அரசு!

உத்தரபிரதேச போக்குவரத்து துறை தனது கணவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்காததால் தான் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மோஹித் யாதவின் மனைவி ரிங்கி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தனது கணவர் பரேலியில் உள்ள போக்குவரத்துத் துறையின் பிராந்திய மேலாளரை அடிக்கடி அழைத்து, வேலையில் மீண்டும் சேர்த்துகொள்ளச் சொல்லி வேண்டியதாகவும் அவர் கூறுகிறார்.

UP Conductor Sacked After Stopping Bus For Namaz, Dies By Suicide sgb

"அவரது தரப்பைக் கேட்காமலே ஒப்பந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த மன உளைச்சலால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். என் கணவர் மனிதாபிமானத்துக்குக் கொடுத்த விலை இது" என்று மோஹித்தின் மனைவி மனக் கொதிப்புடன் தெரிவிக்கிறார்.

ஜூன் மாதத்தில் நடந்த சம்பவம் பேருந்தில் இருந்த பயணி ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவின்படி, மோஹித் யாதவ், பேருந்தை நிறுத்தும் முன் பயணிகளிடம் காரணத்தை எடுத்துக்கூறி பேச முயன்றது தெரிகிறது.

“நாங்களும் இந்துக்கள்தான்... இந்து, முஸ்லீம் என்று எந்தப் பிரச்சினையும் இல்லை... இரண்டு நிமிடம் பேருந்தை நிறுத்தினால் என்ன ஆகிவிடப் போகிறது” என்று மோஹித் யாதவ் பயணிகளிடம் கூறியதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, உ.பி போக்குவரத்துத் துறை எந்த முன்னறிவிப்பும் இன்றி அவரை வேலையில் இருந்து நீக்கியிருக்கிறது.

ரக்‌ஷா பந்தன் நாளில் சிறுநீரகத்தை பரிசாக வழங்கிய பெண்! தம்பியின் உயிரைக் காப்பாற்றிய அன்புச் சகோதரி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios