மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பயந்தர் மேற்கு பகுதியில்  37 வயதான பெண் ஒருவர், தனது கணவர், மகள் (18), மகன் (15) மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். அவரது வாட்ஸ்அப்பில் பல தவறான மெஸேஜ்கள் மற்றும் மிஸ்டு கால் அடிக்கடி வந்தது.

ஒரு பெண்ணின் வாட்ஸ் அப்பில் தனது அந்தரங்க உறுப்பு மற்றும் ஆபாச வீடியோவை அனுப்பிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பயந்தர் மேற்கு பகுதியில் 37 வயதான பெண் ஒருவர், தனது கணவர், மகள் (18), மகன் (15) மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். அவரது வாட்ஸ்அப்பில் பல தவறான மெஸேஜ்கள் மற்றும் மிஸ்டு கால் அடிக்கடி வந்தது.

அதன் பிறகு, ஆன்லைன் படிப்புக்கு செல்போன் பயன்படுத்திய தனது மகளின் வாட்ஸ்அப்பில் ஹாய் என்ற மெசேஜ் வந்தது . அதற்கு ஹலோ யார் இது என்று அந்த பெண் கேட்டபோது, அதற்கு உடனே ஐ மிஸ் யூ என்ற மற்றொரு செய்தி அவருக்கு வந்தது. அதிர்ச்சியடைந்த மகள் தாயிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ்அப் வீடியோ காலில் தோன்றிய அந்த நபர் தனது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். பின்னர் அவருக்கு ஆபாச வீடியோவையும் அனுப்பியுள்ளார்.

அந்த நபரின் போன் கால்கள் மற்றும் மெஸேஜ்களை ஸ்கிரீன் ஷாட்களை எடுத்தார். இதுதொடர்பாக அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.