நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  அவரது கணவர் மற்றும் பயிப்பெண் உள்பட 3 வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொலை செய்த மர்ம நபர்கள் விட்டில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது 

திமுக சார்பில் 1996 ஆம் ஆண்டு நெல்லை மாநகர மேயராக பணியாற்றிவர் உமா மகேஸ்வரி. இவர் நெல்லையில் முதல் பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர். 
இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள தனது வீட்டில் உமா மகேஸ்வரி தனது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் இருந்துள்ளார். அப்போது திடீரென அரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர்கள் மூவரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

மேலும் கொலை செய்தவர்கள் உமா மகேஸ்வரியின் வீட்டில் இருந்த தங்க நகைகளை அளிளிச் சென்தாகவும் கூறப்படுகிறது.சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையின் முக்கிய பகுதியில் முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது