மத்திய அரசு வேலையில் இருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்த உடுமலை கவுசல்யா இப்போது சர்ச்சை கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். 

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கர் – கவுசல்யா கடந்த 2015-ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து சங்கர் உடுமலை நகரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இதையடுத்து, கவுசல்யா சங்கர் சமூக நீதி அறக்கட்டளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். கவுசல்யாவுக்கு மத்திய அரசு ஏற்பாட்டின் பேரில் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் சக்தியை கவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இவருடைய போக்கு பிடிக்காததால் ஊரிலும் இவருக்கு எதிர்ப்பு உண்டானது. இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அமைதியாக இருந்து வந்த கவுசல்யா இப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது கலவரத்தை மூட்டத் தொடங்கி உள்ளார்

.

சக்தியுடன் இருக்கும் புகைப்படங்களையும், அவர் கராத்தே கற்றுக் கொள்ளும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள அவர், வேறொருவர் சாதி ரீதியாக பதிவிட்டுள்ள பதிவியை பகிர்ந்து சாதி மோதலுக்கு வித்திட்டுள்ளார். அந்தப் பதிவில், அரங்க குணசேகரன் என்பவரின் அந்தப்பதிவில், ’’தேனாய் இனிக்கும் செய்தி!எங்கள் வட்டாரத்தில் குறிப்பிட்ட மூன்று கிராமங்களில் கள்ளர் சாதியினர் ஒரு நல்ல முடிவை கிராம அளவிலேயே கூட்டாக எடுத்துள்ளனர்..! அது இதுதான் உள்ளூரில் நம்மோடு உழவு செய்கிற நாற்றுப் பறிக்கிற நடவு செய்கிற ஏழைக்கூலித் தொழிலாளர்கள் யாரும் நம் வீட்டில் வந்து பெண் கேட்பதில்லை. நாமும் அவர்கள் வீட்டில் போய் பெண் கேட்பதில்லை.

எங்கோ வெளியே படிக்கப்போகிற வேலைக்குப் போகிற நமது பெண்களும் தலித் ஆண்களும் நமது ஆண்களும் தலித் பெண்களும் நமது ஆண்களும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், நமக்கு ஒரு இழப்பும் இல்லை. அவர்களின் இளைமையை சாதியின் பெயரால் பிரிக்கவோ, கொலை செய்யவோ வேண்டியதில்லை. அவர்களுடைய சுதந்திரமான முடிவில் நாம் தலையிட வேண்டாம் என்பது அது. இது தமிழ்நாட்டிலேயே ஒரு முன்னுதாரமான முடிவு. வாழ்க தொடர்புடைய கள்ளர் சமூகக் கிராமப் பெரியவர்களே’’ எனப்பதிவிட்டுள்ளதை பகிர்ந்துள்ளார் உடுமலை கவுசல்யா. 

இந்தப்பதிவில் குறிப்பிட்டு இருக்கும் தகவல் உண்மையானதல்ல. ஆனாலும் கவுசல்யா பகிர்ந்திருப்பதால் அதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.