ஆபாச படம் பார்ப்பவர்கள் உலகவில் இந்தியாவில் தான் அதிகமானோர் இருப்பதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியது. அதிலும் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை பலர் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆபாச படத்தை பரப்புபவர்களை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

முதலில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை இவர் பரப்பியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையை சேர்ந்த 72 வயதான மோகன் என்னும் முதியவர் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படத்தை அனுப்பி சிக்கினார். தொடர்ந்து கோவையில் இரண்டு பேர் கைதாகினர். பின் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சுமித்குமார் கல்ரா என்கிற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தற்போது திருச்சியில் ஆபாச படங்களை தரவிறக்கம் செய்ததாக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ரயில்நிலையம் அருகே இருக்கும் ராகின்ஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கடையில் வேலை பார்த்த காதர்பாட்சா(21) என்பவரை கைது செய்துள்ளனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. மேலும் அவருடன் கடையில் பணியாற்றிய முகமது அஸ்ரப் என்பவரை காவலர்கள் தேடி வருகின்றனர். இதனிடையே அதே பகுதியில் இருக்கும் மற்றொரு கடையிலும் சோதனை நடைபெற்றது. அங்கும் ஆபாசப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஷேக் அப்துல்லா (22) என்பவர் கைதாகி இருக்கிறார். அதே கடையில் பணியாற்றும் ரியாசுதீன் என்பவர் தேடப்பட்டு வருகிறார்.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!