Asianet News TamilAsianet News Tamil

கொடுத்த காசை திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட ஏற்பட்ட விபரீதம்... அனாமத்தா போன ரெண்டு உயிர்!!

கொடுத்த காசை  திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கடனைக் கொடுத்த பெண்ணும், கடன் வாங்கிய பெண்ணும் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two women Fire and Death at kanyakumari
Author
Chennai, First Published May 4, 2019, 8:11 PM IST

கொடுத்த காசை  திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கடனைக் கொடுத்த பெண்ணும், கடன் வாங்கிய பெண்ணும் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சரலூரைச் சேர்ந்தவர் சங்கரகுமார். இவருடைய மனைவி அம்பிகா. இவர் அப்பகுதியிலுள்ள மகளிர் சுயஉதவிக்குழு ஒன்றின் தலைவியாக இருந்தார். அம்பிகா நடத்தி வந்த சுய உதவிக்குழுவில் ராமன்புதூரைச் சேர்ந்த தங்கம் என்பவரும் உறுப்பினராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுயஉதவிக்குழு மூலமாக ரூ.4 லட்சம் கடன் பெற்றார் தங்கம். ஆனால், அந்த கடனை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை.

வாங்கிய கடனைக் கேட்டதால் தங்கத்துக்கும் அம்பிகாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று வாங்கிய கடனைத் திருப்பித் தருகிறேன் என்று அம்பிகாவிடம் தங்கம் கூறியுள்ளார். இதனால் உஷா என்ற பெண்மணியை அழைத்துக்கொண்டு தங்கத்தின் வீட்டுக்குச் சென்றுள்ளார் அம்பிகா.

வழக்கம்போல கடனைத் திருப்பிக் கொடுக்காமல் அம்பிகாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் பேச்சு முற்றிய நிலையில் சமையலறையில் இருந்த மண்ணெண்ணெயைத் தன் மீது ஊற்றிக்கொண்டார். அவரது மிரட்டலுக்குப் பதில் தருவதாக நினைத்து, அம்பிகாவும் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். 2 பேர் மீதும் தண்ணீர் ஊற்றுவதற்காகப் பின்புறம் சென்றார் உஷா. அதற்குள் தன் மீது நெருப்பு பற்றவைத்துக்கொண்டார். அந்த நெருப்பு எதிரே நின்றிருந்த  அம்பிகாவின் மீதும் பரவியது. இருவரும் கொழுந்துவிட்டு எரிந்தனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும்  தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அம்பிகா பலியானார். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தங்கம் அழைத்த்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார். கடனைக் கொடுத்தவரும் வாங்கியவரும் ஒரு  சமயத்தில் தீக்குளித்துப் பலியானது அவ்வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios