திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, மாணவியை ஆபாச புகைப்படம் எடுத்து, பின்னர் மார்பிங் மூலம் நிர்வாண படமாக்கி நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பிய டிவி நடிகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியைச் சேர்ந்தவர்  தீவி நடிகர் ஷான். இவர் ஏராளமான மலையாள டிவி தொடர்களில் நடித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவியுடன் இவருக்கு  பழக்கம் ஏற்பட்டது.

ஷான் மாணவியிடம் டிவி தொடர்களில் நடிக்க  வாய்ப்பு தருவதாகவும், திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர் மாணவியை பல கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் இந்த போட்டோக்களை மார்பிங் செய்து நிர்வாண படங்களாக மாற்றியுள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மாணவி, ஷானிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கும், துபாயில் பணிபுரியும் ஒரு  வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 

இதையறிந்த ஷான், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வாட்ஸ்ஆப்க்கு மாணவியின் ஆபாச போட்டோவை அனுப்பி வைத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாப்பிள்ளை மாணவியை திருமணம் செய்ய  மறுத்துவிட்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாலோடு போலீசில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஷான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.