தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் பழகியதால் ஆத்திரமடைந்து பெண் காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திரிபுரா மாநிலம் கோவாய் அடுத்த பெல்சேரா கிராமத்தை சேர்ந்த கவுமென் சந்தல் (30) என்பவர் உல் காயங்களுடன் அகர்தலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆசிட்  வீச்சில் மூக்கு மற்றும் கண் மற்றும் சுவாச குழாய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.  அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து அவரது சகோதரர் தனது அண்ணனின் பெண் தோழியான பினட்டா சந்தல் (27) என்பவர் ஆசிட் வீசியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள்ட் வெளியாகியுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கூறுகையில்;- இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  கடந்த 2 ஆண்டுடாக சவுமென் வேறு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்த நிலையில் பிளஸ் டூ படித்த பின்பு மேற்படிப்பு படிக்க சிரமப்பட்ட சவுமேன் சந்தலை இந்தப் பெண் படிக்க வைத்துள்ளார்.  8ம் வகுப்பு மட்டுமே படித்த பினட்டா. பல இடங்களில் பாத்திரம் தேய்த்து. கூலி வேலை செய்து பணம் அனுப்பி காதலனை படிக்க வைத்தார்.

 2018 பட்டப்படிப்பை முடித்த சவுமென் வேலைக்கு சேர்ந்ததும் அந்த பெண்ணிடம் பேசுவது தவிர்த்து வந்தார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதையும் அறிந்து ஆத்திரம் அடைந்த  அந்த பெண் தனது காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.