திருச்சியில் போலீஸ் என்று கூறி போதை காதலனை தாக்கி கல்லூரி வளாகத்திலேயே மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.  

திருச்சி அருகே துவாக்குடியில் என்.ஐ.டி. பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வெளிமாநில மாணவ- மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி வளாகத்தில் விடுதியும் உள்ளது. இங்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி 3-ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவியும், சென்னையை சேர்ந்த மாணவனும் காதலித்து வந்துள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி இல்லாமல் விடுதியை விட்டு வெளியே சென்று காதலுடன் மாணவி 2 நாட்களாக ஊர் சுற்றி உள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு கல்லூரிக்கு செல்வதற்காக வந்தவர் கல்லூரி முன் உள்ள பேருந்து நிழற்குடையில் காதலனுடன் ஜாலியாக இருந்துள்ளார். 


அப்போது அங்கு, 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வந்தார். மாணவியும், அவரது காதலனும் இருந்த கோலத்தை பார்த்து, தன்னை போலீஸ் என்று கூறி விசாரித்துள்ளார். அப்போது இருவரும் உச்சகட்ட கஞ்சா போதையில் உளறினர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த வாலிபர், காதலனையும், மாணவியையும் சரமாரியாக தாக்கினார். இதில் அடி தாங்க முடியாத காதலன் தப்பித்தால் போதும் என ஓடிவிட்டார்.

பின்னர், மாணவியை கல்லூரி விடுதியில் விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால், விடுதிக்கு அழைத்து செல்லாமல் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று மாணவியை பலாத்காரம் செய்தனர். பின்னர், அவரது நண்பர்களும் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவி பயங்கரமாக அலறினார். உடனே பயந்து போன 3 பேரும் யாராவது வந்து விடுவார்கள் என்ற பீதியில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து தப்பினர். 

இதுகுறித்து காதலனுடன் அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவி, அவரது காதலன் கூறிய அடையாளங்கள் மற்றும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இது தொடர்பாக 5 பிரிவுகளில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே விடுதியில் தங்கியுள்ள மாணவியை இரவு நேரங்களில் வெளியில் செல்ல கல்லூரி நிர்வாகம் எப்படி அனுமதி வழங்கியது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.