கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டாரு! பள்ளி மாணவி கதறல்! பாஜக முக்கிய நிர்வாகியை தூக்கிய போலீஸ்

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (26). இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். 

trichy bjp youth wing secreatary arrrested in pocso act

17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (26). இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். பின்னர், அச்சிறுமியிடம் காதலிப்பதாக கூறிய வினோத் திருமண ஆசைக்காட்டி அவரை பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- பல பெண்களுடன் உல்லாசம்.. மனைவியுடன் படுக்கையில் இருந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கொடூர கணவர்..!

trichy bjp youth wing secreatary arrrested in pocso act

அந்த சிறுமியிடம் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். இத்தொடர்பாக அந்த சிறுமி வினோத்திடம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் திருவரங்கரம் போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். 

இதையும் படிங்க;- குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்! ஃபாரினிலிருந்து வந்ததும் வாலிபரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

trichy bjp youth wing secreatary arrrested in pocso act

இதையடுத்து திருவரங்கம் மகளிர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பாஜகவினர் தொடர்ந்து பாலியல் வழக்கில் அடுத்தடுத்து கைதாகி வருவது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios