கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு என்ற அபிராமி. திருநங்கையான இவர் விழுப்புரம் அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்றிரவு வழக்கம் போல் அபிராமி தன்னை அலங்கரித்துக் கொண்டு விழுப்புரத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யன் கோயில்பட்டு என்ற இடத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் அவரிடம் தகராறு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அபிராமியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து பிணத்தை சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றனர்.

இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விழுப்புரம் தாலுக்கா  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.