முதியோர் காப்பகம் என்ற பெயரில் மூன்று முதியவர்களை வீட்டின் உள்ளே அடைத்து, அடித்து பட்டினி போட்டு சித்திரவதை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த நிலையூர் அருகில் உள்ளது திருப்பதிநகர் . இங்கு முதியோர் இல்லம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் ஸ்டீபன்ராஜ் இந்த இல்லத்தை மேலாளளர் ஷீலா கவனித்து வந்தார். இங்கு முதியவர்களான தமிழ்ச்செல்வி (புதுக்கோட்டை), குரூசோதையால் (யாகப்பா நகர்), செல்வி (துரைசாமி நகர்) ஆகிய மூவரையும் அவர்களது உறவினர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த காப்பகத்தில் விட்டு சென்றனர். இவர்களுக்கு ஏழு மாதங்களாக உணவும் வழங்காமல் வீட்டின் உள்ளே அடைத்து வைத்தும் அடித்து துன்புறுதியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை வட்டாச்சியர்  நாகராஜ் மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று  விசாரணை மேற்கொண்டனர். அதில் இதற்கு முன்னதாக மதுரை பெருங்குடி பகுதியில் காப்பகம் நடத்தி வந்ததாகவும், கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக நிலையூர் திருப்பதி நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து காப்பகம் நடத்தி வருவது தெரிய வந்தது.

 இவர்கள் பகல் முழுவதும் வீட்டின் முன் கதவு பூட்டப்பட்டு நிலையிலேயே இருக்கும், இரவு நேரங்களில் முதியோர்களை அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் உணவும் வழங்கப்படாமால் பட்டினி போட்டு வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினரை விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மூவரையும் சமூக ஆர்வலர்கள் மூலம்  அங்கீகரிக்கப்பட்ட காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்பு முறையாக, அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களிடத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் நாகராஜ் தெரிவித்தார். காவல்துறையினர் காப்பகத்தை நடத்திய உரிமையாளர் ஸ்டிபன் ராஜ் மற்றும் மேலாளர் ஷீலா மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.